இராவணனின் சீதை 31 💖

1K 24 2
                                    

விக்ரமிற்கு யாஷ் போன் செய்து வளைகாப்பு விழாவிற்கு அழைத்தை எப்படி வீட்டில் கூறுவது என்று தெரியாமல் யோசித்தான்... அனைவரும் சாப்பிட அமரும்போது இது தான் நல்ல வாய்ப்பு என்று நாளைக்கு என் பொண்டாட்டிக்கு வளைகாப்பு ...நம்ம எல்லாரும் போறோம் என்று அவன் சொல்ல ...

டேய் அதுக்கு முதல்ல கல்யாணம் பண்ணனும் என்று அவன் அண்ணன் யோகேந்திரன் கூறினான்... பிரதர் எனக்கு கல்யாணம் ஆகி 7 மாசம் ஆயிட்டு... என் பொண்டாட்டியே இப்போ ஏழு மாசம் என்று வெட்கப்பட்டுக் கொண்டே கூறியவன் ...இது அப்பா அம்மா கூட தெரியுமே என்றான்... சாப்பிட்டு கொண்டிருந்த பூரணி அதிர்ச்சியில் என்னடா சொல்ற ..எங்க கிட்ட கூட சொல்ல ஏன் தேவா என்று கேட்க..

எப்படி சொல்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருந்தேன் பட் சொல்லி தான ஆகனும் அதான் சொல்லிட்டேன்.. நாளைக்கு வர சொல்லி யாஷ் போன் பண்ணி சொல்றான்... என்ன பண்ணலாம் டாடி ...என் பேபிக்கு ஏதாவது வாங்கிட்டு போனும் எனி ஐடியா என்று அவன் கேட்க... சதாசிவம் மகனை முறைத்தவர் ஒழுங்கு மரியாதையா அவனை நாளைக்கு அடக்க ஒடுக்கமா வர சொல்லுடி...

ஏற்கனவே அந்த பொண்ணு இவனோட அடாவடி தனத்துல பயந்து போய் கிடக்குது... இவன் இப்படியே சுத்திக்கிட்டு இருந்தானா அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு கூட வராது என்று அவர் கூற.. அப்ப உனக்கும் தெரியுமா அப்பா என்று யோகேந்திரன் பாவமாக கேட்க ...அப்பாவி மாதிரி நடிச்சு வீட்டை ஏமாத்துறான் என்று தேவா மனதிற்கு புலம்பி கொண்டே...இப்ப நடக்கிறது எல்லாமே நிஜம் ...நம்பு டா அண்ணா..

நாளைக்கு கண்டிப்பா நீ என் பொண்டாட்டி நேர்ல பாரு அப்ப தெரியும் அவளை பத்தி என்று தேவா சிரிக்க... சதாசிவம் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினார்... முதலில் தம்பி மீது கோபம் கொண்டவன் பின் நியாயத்தை உணர்ந்து கொண்டு ஒரு ஐஏஎஸ் ஆபிஸர் இப்படி சொல்ல கூடாது... இருந்தாலும் என் தம்பின்னு ஒரு காரணத்துக்காக உன்னை மன்னித்து விடுகிறேன் என்றான் யோகேந்திரன்...

இராவணனின் சீதை 💖Donde viven las historias. Descúbrelo ahora