இராவணனின் சீதை 29

990 27 1
                                    

லதா அந்த இடத்துக்கு வரும் முன்னே யுகமதியை தன்னிடம் இருந்து பிரித்து அமர வைத்தவன் வருனை தூக்கிக்கொண்டு வெளியே வந்தான்... தம்பி எங்க தூக்கிட்டு போறீங்க என்று தேவாவிடம் லதா கேட்க ...ஹாஸ்பிடல் தான் இவ்வளவு நேரம் வீட்டில் வைத்திருக்கிறது தப்பு என்றவன் வண்டியில் ஏறிக்கொள்ள லதாவும் கூடவே சென்றால் ...

நல்ல காய்ச்சல் அடித்து.. மயக்கத்தில் இருந்தால் வரும் டாக்டர் பரிசோதித்து விட்டு மருந்து கொடுத்து வீட்டிற்கு அனுப்பினார்... நல்ல வேலை தம்பி நீங்க கூட இருந்தீங்க இல்லன்னா என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சுகிட்டு இருந்திருப்பேன் ...அந்த நேரத்தில் நீங்கள் எப்படி கரெக்டா அங்கு வந்தீங்க என்று கேட்க ...ஒரு கேஸ் விஷயமா காலையில வந்தேன் அப்பதான் உங்களை பார்த்தேன் என்று ஏதோ கூறி மறுப்பினான் விக்ரம்...

வரதன் சார்கிட்ட சொல்லி அனுப்புறேன் மறுபடியும் காய்ச்சல் என்றால் கூட்டிட்டு போய் காட்டுங்க என்று கூறிய விக்ரம் யுகமதியை பார்த்துக் கொண்டே வெளியேறினான் ...பள்ளிக்கு கிளம்பும் நேரம் ஆகிவிட மெதுவாக கிளம்பி வெளியே வந்தால்... அங்கு யாஷ் லதாவிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அவர்களின் நோக்கி சென்றாள்...

எதுவா இருந்தாலும் எனக்கு போன் பண்ணுங்க அக்கா ...நான் ஓடி வந்துடுறேன் என்று லதாவிடம் கூறியவன் யுகமதியை அழைத்துக் கொண்டு சென்றான்... என்ன ஆச்சு நேத்துல இருந்து முகமே சரியில்ல என்று அவன் கேட்க ....அதெல்லாம் ஒன்னும் இல்ல கொஞ்சம் அசதியா இருந்தது... லேட்டா எழுந்ததுனால மூஞ்சி ஒரு மாதிரியா இருக்கு என்றாள் மழுப்பலாக....

ஏதோ மறைக்கிற டி என்கிட்ட... சீக்கிரமா சொல்லணும்னு தோணுச்சுன்னா சொல்லு என்றான் ...ஆனால் கண்டிப்பாக அவனிடம் கூற வேண்டும் என்ற கட்டளை அதில் மறைந்திருந்தது ..அவளை பள்ளியில் விட்டுவிட்டு அவன் வண்டியை எடுத்ததும் விக்ரம் உள்ளே நுழைந்து இருந்தான்... அவனைப் பார்த்ததும் வேகமாக அவள் உள்ளே செல்ல அவளிடம் கட்டாயப்படுத்தி பேச விரும்பாதவன் வண்டியை யாஷீன் ஜானகி கன்ஸ்ட்ரக்ஷனுக்கு திருப்பி இருந்தான் ...

இராவணனின் சீதை 💖Où les histoires vivent. Découvrez maintenant