இராவணனின் சீதை 41 💖

2.1K 33 35
                                    

விக்ரம் தூங்கி எழும் வரை அமைதியாக அவன் தலையை வருடிக் கொண்டிருந்தாள் யுகமதி ... சற்று நேரத்திற்கு எல்லாம் குழந்தை பசிக்கு சினுங்க குழந்தையை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு பால் புகட்டினால்... மடியில் மற்றொரு பெரிய குழந்தை கெட்டியாக பிடித்து தூங்கிக் கொண்டிருக்க இருவரையும் மாறி மாறி பார்த்து சிரித்துக் கொண்டாள் ...

குழந்தை சினுங்கும்போது விக்ரமிற்கு லேசாக முழிப்பு வந்தது ... ஆனால்
எழுந்து கொள்ள மனம் இல்லாதவன் சற்று புரண்டு படுத்து மனைவியின் முகத்தை பார்த்தான் ... அவளும் அவனைத்தான் பார்த்து கொண்டிருந்தாள்... என்னடி மாமி சைட் அடிக்கிறியா என்று கேட்க... ஆம் என்று தலையசைத்தவள் தம்பிக்கு பால் கொடுக்கணும் கொஞ்சம் தள்ளி போங்க என்றால் ...

எழுந்து அவள் எதிரே அமர்ந்து கொண்டான்... வெளிய போங்க என்று சொல்ல ... எனக்கு இல்லாத உரிமையா டி என்று அவள் மேல் துண்டை எடுத்து போட்டவன் வெளியே சென்று விட்டான்... வாங்க மாப்பிள்ளை சாப்பிடுறீங்களா என்று சாவித்திரி கேட்டதும் பரவாயில்லை அத்தை யுகா வரட்டும் அப்புறம் சாப்பிடுகிறேன் என்றான்... அவளும் குழந்தைக்கு பசியாற்றி விட்டு மெல்லமாக எழுந்து வந்தால்...

இருவரும் சேர்ந்து உணவு உண்ட பின் வேந்தன் மருமகனிடம் குழந்தைக்கு பேர் வைக்கணும் வீட்ல பெரியவங்க கிட்ட நாளைக்கு பேசலாமா என்று கேட்க... கண்டிப்பா பேசலாம் மாமா என்றவன் அடுத்த நாள் தன் தாய் தந்தையை அங்கு வரும்படி கூறிவிட்டு போனை வைத்து விட்டான்... யாஷ் எங்கே என்று மீனாட்சியிடம் மதி கேட்க... இப்பதான் மித்ராவுக்கு சாப்பாடு கொண்டு போனான் ரூம்லயே சாப்பிட்டு தூங்குவான்.. நீங்க போங்க என்று மீனாட்சி கூறியதும்...

பரவால்ல பையன் தேறிட்டான் என்று விக்ரம் மனதிற்குள்ளே சொல்லியவன் அவர்களிடம் தலையை சேர்த்து விட்டு தன்னறைக்கு சென்று விட்டான்... யுகமதி சிறிது நேரம் கழித்து அறைக்கு வர குழந்தையின் கை கால்களை பிடித்து பார்த்துக் கொண்டிருந்தான் விக்ரம்... எனக்கு என்னை போலவே ஒரு மகன் ... அப்படியே உடம்பெல்லாம் ஏதோ பண்ணுது டி மாமி.. இந்த பீல் எனக்கு என்னமோ பண்ணுது என்றான் சிரித்துக் கொண்டே...

இராவணனின் சீதை 💖Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin