இராவணனின் சீதை 14💖

1K 21 8
                                    

யாஷ் இரண்டு நாட்களாக தனது ஜானகியிடம் பேசாமல் சோர்ந்து போனான்.... அருகில் இருந்தால் எந்நேரமாக இருந்தாலும் அவளைக் காண வீட்டிற்கு சென்று இருப்பான்... தொலைபேசியில் அடிக்கடி அழைக்கக் கூடாது என்று கட்டளை விதித்தவளே அவன் அழைக்கும் நேரம் எடுக்காமல் போனால் என்ன செய்வான்....

அவளுக்கு ஏதோ ஆபத்து என்று மனம் உறுதி கொண்டே இருக்க அவளுக்கு நியமித்த பாடிகாட்களும் அவள் வீட்டை விட்டு இரண்டு நாட்களாக வரவில்லை என்ற தகவலை கொடுத்தனர் .... யாரிடமும் கேட்டு இந்த பயனும் இல்லை என்று தனது தந்தைக்கு அழைத்தவன் நேராக ஜானகியை பார்த்துவிட்டு வருமாறு கூறினான் ....இப்பொழுது ஊருக்கு கிளம்பியாக வேண்டும் என்ற மனநிலையில் இருந்தான் ....

தான் ஆரம்பித்த ஜானகி அண்ட் கோ பலதரப்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது... அதன் வளர்ச்சி இப்போது தான் உயர்ந்து கொண்டிருக்கிறது.. இந்த சமயத்தில் அதை அப்படியே விட்டு விட்டு செல்லவும் மனம் வரவில்லை... இதனால் பல லட்ச மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்திற்காகவே இங்கு அமர்ந்திருக்கிறான்... தந்தையிடம் இருந்து பதிலுக்காக அரை மணி நேரமாக தலையைப் பிடித்துக் கொண்டு அங்கும் இங்கும் தனது அறையில் நடமாடிக் கொண்டிருக்கின்றான்....

இங்கு அவன் ஜானு வந்ததில் இருந்து சாப்பிடாமல் உண்ணாவிரதமும் மௌன விரதமும் கொண்டிருக்கிறாள்.... அவளை விட்டு சென்ற அய்யனார் காலையிலிருந்து இன்னும் வீடு திரும்பவில்லை ....இரவு நேரம் நெருங்க சாரதா பாட்டி பத்திரமாக இருக்கும்படி கூறிவிட்டு சென்றுவிட்டார்... மணி அவளுக்கு காவலுக்காக வாசலிலேயே அமர்ந்திருந்தான்...

அவளும் அதை அறிந்து வைத்திருந்தால் மெதுவாக வாசலில் மணி அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து சற்று தள்ளி புல் தரையில் அமர்ந்து கொண்டாள் ...என்னாச்சு அண்ணி ஏன் அங்க உட்காரிங்க இங்க வந்து நாற்காலியில் உட்காருங்க... அண்ண பார்த்தா என்னை திட்டும் என்று மணி கூற அவனை திரும்பி பார்த்தவள்... உங்களை எதுவும் சொல்ல மாட்டாரு எனக்கு இங்கே உட்காரதான் சௌகரியமா இருக்கு என்று அமர்ந்து கொண்டு வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் ....

இராவணனின் சீதை 💖Dove le storie prendono vita. Scoprilo ora