விக்ரமும் யுகமதியும் அக்ரகாரத்திற்கு வந்து சேர்ந்தார்கள்... யுகமதிக்கு ஏதோ வேள்வி தீயில் நிற்பதை போல் உணர்ந்தால் ...இந்த கொலைகாரன் தன் வாழ்வே சீரழித்தது இல்லாமல் தனது வீட்டிற்கு அழைத்து வந்து தன் குடும்பத்தை அவமானப்படுத்த தான் அழைத்து வந்து இருக்கிறான் என்று அழுகையுடன் அமர்ந்திருந்தால்...
விக்ரம் எதுவும் பேசாமல் எப்பொழுதும் போல் இறுகிய முகத்துடன் இறங்கு என்றான் ...அழுது கொண்டே இறங்கி மெதுவாக உள்ளே சென்றாள் ...யாரையும் எதிர்கொள்ளும் தைரியம் அவளுக்கு இப்பொழுது இல்லை... தம்பி தங்கை இருவரும் பள்ளி செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தனர்...
விக்ரமின் காரை கண்ட செந்தில் தனது குப்பத்திலிருந்து அடித்து பிடித்து ஓடி வந்தான்... மணிக்கு போன் செய்து அண்ணன் அக்ரஹாரத்து கிட்ட போகுது ஏதாவது பிரச்சனையா என்று கேட்டான்... அவனுக்கும் தெரியவில்லை என்று சொன்னவுடன் போனை வைத்துவிட்டு நேராக யுகமதியின் வீட்டு வாசலில் வந்து நின்றான்...
அண்ணன் எதுக்கு இந்த வீட்டுக்குள்ள போகணும் என்று உள்ளே செல்ல தயங்கியபடியே அவன் காரில் அருகில் நின்று கொண்டிருந்தான் ...அவளது தந்தை பேப்பர் படித்துக் கொண்டிருந்தவர் யுகமதியை பார்த்து ஜானகி ஊருக்கு போறேன்னு சொன்ன காலையில வந்து நிக்கிறியே மா என்ன ஆச்சு என்றார் அவளது அழுத முகத்தை பார்த்து பதற்றத்துடன் ...
அவள் அழுது கொண்டே இருக்க அவளது சித்தியும் வந்துவிட்டால்... ஊரு மேய போறேன்னு சொல்லிட்டு அவசரமா கிளம்பி போன இங்கே எதுக்கு வந்து நிக்கிற என்று அவர் வெறுப்பாக கேட்க... இன்னும் அழுகை கூடியது... இத்தனை நாள் அவள் பேச்சு ஊசியாக குத்தினாலும் அதை தூசி தட்டுவது போல் தட்டி எறிந்து விட்டு செல்பவர் தான்... ஆனால் இன்று உடல்வலி மனவலி எல்லாம் விக்ரமினால் ரணப்பட்டு இருக்க அவளால் எதையும் தாங்க இயலவில்லை...
என்ன ஆச்சுமா தந்தை மிக அருகில் வந்து பார்க்க... அவளது கழுத்து கைகளில் சிறு சிறு கீறல்கள்.... பயந்து பதட்டத்துடன் சொல்லு மா என்று கேட்க ...விக்ரம் உள்ளே நுழைந்தான் ...நீங்க யாரு ...தம்பி ஏன் என் பொண்ணு அழுகிறா... நீங்களாவது சொல்லுங்களேன் என்று கேட்க... உங்க பொண்ணை நான் ரேப் பண்ணிட்டேன் என்றான் பொறுமையாக...
YOU ARE READING
இராவணனின் சீதை 💖
Romanceஇராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை எடுத்து அவன் மன சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை கொடுத்தான். அவளும் அந்த சிறையில் விரும்பியே அடைந்து கொண்டாள் அந்த இராவணனின் சீதையாக .