இராவணனின் சீதை 32 💖

1K 26 2
                                    

யுகமதி விக்ரம் தன்னிடம் பேசாமல் போனது நினைத்து மிகவும் வருத்தம் அடைந்தால்... மித்ரா சமையலை கவனித்துக் கொண்டிருக்க இவள் சும்மா இருக்க பிடிக்காமல் அவளின் உதவிக்கு சென்றால்... அதையும் தடுத்து நீ சும்மா இரு மதி நான் பார்த்துக்கிறேன்... இது கூட உனக்காக செய்ய மாட்டனா என்று பாசமாக கண்டிக்கும் அவளை மதிக்கு மிகவும் பிடித்திருந்தது...

டேய் ராவணா உன்னோட பேபியை மறந்துட்டியா என்று மனதோடு புலம்பியவள் ...என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தாள் .. மித்ராவிடம் அவ்வளவு சுலபமாக தன் மனதில் இருப்பதை புலம்ப முடியவில்லை... நேராக விக்ரமையே சென்று பார்க்கலாம் ஆனால் அவன் பதவியும் மற்ற அனைத்தும் அவளுக்கு பயத்தை வரவழைத்தது என்னமோ உண்மை ...

அதுவும் அவன் தந்தை டிஜிபி சதாசிவத்தை அவள் நிறைய தடவை பார்த்திருக்கிறாள்... அந்த ஊரிலேயே மிகவும் நேர்மையான அதிகாரி அவர்தான் என்று தந்தையே பலமுறை பாராட்டி உள்ளார் ...சிறிது நேரம் அமர்ந்திருந்தவள் தம்பி தங்கைக்கு அழைத்து பேசலாம் என்று தொலைபேசி எடுத்தாள் ...அவர்களிடம் பேசிவிட்டு தந்தையிடம் பேச மகளின் வளைகாப்பிற்கு செல்லலாம் என்று நினைத்தவர் தான்... ஆனால் மனம் கேட்கவில்லை ...

அவளுக்கு சிறுவயதில் இருந்தே அனைத்தையும் கொடுத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவரை செல்ல விடாமல் தடுத்து விட்டது... ஆனால் மகளே அழைத்து பேசும் போது பேசியாக வேண்டும் என்று சொல்லு ஜானகி எப்படி இருக்கு என்றார் குரல் தழுதழுக்க ...நான் நல்லா இருக்கேன்... என்னதான் நீங்க மறந்துட்டீங்க .. உங்க பொண்ணா நெனச்சிருந்தா வந்து இருப்பீங்க இல்லப்பா என்றால் கண்ணீருடன்....

இவள் இப்படி கவலைப்படக்கூடாது என்ற காரணத்திற்காக தான் நேற்று விக்ரம் அவளிடம் அவ்வளவு வம்பு செய்தான்... ஆனால் இன்று தனிமை அவளை கவலை வாட்ட அழுதுவிட்டால் ...இல்ல ராஜாத்தி என் பொண்ணு மேல எனக்கு என்ன கோபம்... நான் உன் மேல உயிரையே வச்சிருக்கேன்... ஆனா உனக்கு ஒரு நல்ல அப்பாவா இல்லை... எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு உன் முன்னாடி வந்து நிற்பேன் என்றார் கண்ணீருடன் ...

இராவணனின் சீதை 💖Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin