இராவணனின் சீதை 18 💖

1.1K 26 0
                                    

யுகமதியை பார்த்து விக்ரம் கண்ணடித்ததும் அவள் வெட்கத்தில் தலை துணிந்து கொள்ள சுத்தியுள்ள அனைவரும் ஆஆஊஊ என்று கத்தினர்... விக்ரம் நல்லவன் என்று தெரிந்தாலும் யுகமதியிடம் அவன் நடந்து கொண்டது அவருக்கு தவறாகவே பட்டது அகீர் பாய்க்கு... ஆனால் இப்பொழுது அவளது வெட்கம் தான் நினைத்தது தவறு என்று நினைக்க தோன்றியது...

சரி விக்ரம் சட்டையை போட்டுட்டு வீட்டுக்கு வா என் பொண்ணு சாய்ஷா உன்னை பாக்கணும்னு சொன்னா என்று சொன்னவுடன்... கண்டிப்பா பாய் என்று யுகமதி மடியில் இருந்த சட்டையை எடுத்து போட்டுக் கொண்டவன் அவளையும் கையோடு அழைத்துக் கொண்டு பாய் இருக்கும் வீட்டிற்கு சென்றான்...

கடற்கரையை ஒட்டி நிறைய வீடுகள்... அனைத்தையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டே யுகமதி வந்தால்.. விக்ரம் ஒரு பெண்ணொடு வருவதை பார்த்து அனைவரும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க ஒரு மாதிரி அசோகரிமாக உணர்ந்தவள் பயத்தில் விக்ரமின் புஜத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்... அவள் பயத்தை உணர்ந்தவன் அவள் கையில் அழுத்தத்தைக் கூட்டி நான் இருப்பதாக கண்மூடி திறந்தவன் அணைத்து கொண்டு போனான்...

அகீர் பாயின் மனைவி பாத்திமா அவளை என் முகமாக வரவேற்று தண்ணீர் கொடுக்க அவளும் ஒரு சிரிப்புடன் வாங்கி குடித்துவிட்டு அமர்ந்து விட்டாள் ...பொண்ணு அழகா இருக்கு எங்க கிட்ட கூட சொல்லாம கல்யாணம் கட்டிகிட்டியா என்று அவர் குறை பட்டுக்கொள்ள...

அப்படி எல்லாம் இல்லம்மா எனக்கு புடிச்சது அதனால உடனே கல்யாணம் கட்டிக்கிட்டேன்... நாலு நாள் தான் ஆகுது என்று அவன் சொல்ல... என்னமோ என் பையன் கல்யாணத்தை தான் பார்க்க கொடுத்து வைக்கல ...உன் கல்யாணத்தை பார்த்து மனசு சந்தோஷப்படுத்திக்கலாம் என்று நினைத்தேன்.. அதுவும் இந்த அம்மாவுக்கு கொடுத்து வைக்கல டா என்று வருத்தத்துடன் கூறியவர் உள்ளே சென்றுவிட்டார்..

பாய் கண் கலங்க நான் மனசுல நினைச்சது தான் அவளும் சொல்றா... பேசாம ஊரகட்டி ஒரு தடவ கல்யாணம் பண்ணிக்கிறியா என்று கேட்க... பாய் இது என்ன விளையாட்டு பொருளை திரும்பத் திரும்ப அவ கழுத்துல கட்டுறதுக்கு... மனசால அவளை நான் எப்பயோ மனைவியா ஏத்துக்கிட்டேன்... இந்த தாலி வெறும் சம்பிரதாயத்துக்கு மட்டும் தான்...

இராவணனின் சீதை 💖Donde viven las historias. Descúbrelo ahora