யாஷ் யுகமதிக்கு போன் செய்து அழுத்து போனவன் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டான் ...மீட்டிங் வேறு இருக்கிறது ...கண்டிப்பாக அதில் கவனம் செலுத்த முடியாது என்று யோசித்தவன் உடனடியாக வேந்தனுக்கு அழைத்தான்...
அவர் எடுத்ததும் என்ன யாஷ் எப்படி இருக்க என்று கேட்க... நான் நல்லா இருக்கேன் மாமா.... எங்க போன அவ போன் எடுக்க மாட்றா என்று கேட்டவன் குரலில் வருத்தம் தெரிய... அவ பிரண்டு வீட்டுக்கு போய் இருக்கா டா.... ரெண்டு நாள் அங்க தான் இருக்க போறதா சொன்னா... உன்கிட்ட எதுவும் சொல்லலையா முன்னாடியே என்று யோசனையாக கேட்டார் ...
ஏனென்றால் அவள் எதையுமே அவனிடம் இருந்து மறைத்ததில்லை ...இல்ல மாமா என்கிட்ட சொல்லல என்றான்... ஏதோ அவசரத்தில் மறந்திருப்பா... அதை விடு அவ பத்திரமா இருக்கா பஸ்ஸில் இருப்பா சத்தத்தில் கேட்டிருக்காது...இல்லை தூங்கிருப்பா ...நீ கவலை படாமல் இருடா என்று வைத்துவிட ... அவனுக்கு யுகமதியை நினைத்து வருத்தமாக இருந்தது....
தன்னவளுக்கு ஏதோ ஆபத்து என்று மட்டும் மனது அடித்துக் கொண்டே இருக்க... எந்த ஆபத்தும் அவளிடம் நெருங்காமல் இருக்கணும்.... அவளுக்கு ஏதாவது ஆச்சு அவங்களை நான் உயிரோட பொதைச்சிருவேன் என்று வெறிகொண்ட சிங்கம் போல் அவன் அமர்ந்தான்...
அவனது பிஏ அவனது முகத்தைப் பார்த்து பயந்தவாரே சார் என்றார் பொறுமையாக.... தன்னை சாந்தப்படுத்திக் கொண்டவன் சொல்லுங்க சார் என நிதானமாக கேட்க... மீட்டிங் இருக்கு என்றார்... உடனடியாக மீட்டிங் அறைக்கு சென்றான் அனைத்தும் முடிந்து திரும்பவும் அவளுக்கு அழைத்துப் பார்க்கலாம் என்று நினைத்தான்...
தூங்கிக் கொண்டிருந்தால் என்ன செய்வது என்று நினைத்து காலையில் அழைத்துக் கொள்ளலாம் என்று வைத்து விட்டான் ...,வாட்ஸ் அப்பில் தனது குரலை பதிவு செய்து அவளை திட்டி அனுப்பி வைத்த பிறகு அவனுக்கு மனம் சற்று நிம்மதி பெற ...உனக்கு எதுவுமே ஆகாது ஜானு என்றான் மனதில்...

YOU ARE READING
இராவணனின் சீதை 💖
Romanceஇராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை எடுத்து அவன் மன சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை கொடுத்தான். அவளும் அந்த சிறையில் விரும்பியே அடைந்து கொண்டாள் அந்த இராவணனின் சீதையாக .