இராவணனின் சீதை 33💖

1.3K 25 4
                                    

விக்ரம் யுகமதியை அணைத்துக் கொண்டு காரில் அமர்ந்திருந்தவன் அவளிடம் இவ்வளவு நாள் கழிச்சு இப்பதான் மேடம்க்கு என்னோட பாசம் புரியுதா என்று கேட்க... எனக்கு எப்பவோ புரிஞ்சது ஆனா இப்பவும் மனசுக்குள்ள ஒரு பயம் இருக்கு... நீங்க ரொம்ப பெரிய ஆளு ...ஆனா நான் அப்படி இல்லை என்று அவள் கூறிய உடன்... அடியே நான் உன்னோட குழந்தை தனமான முகத்தை பார்த்து தான் விழுந்துட்டேன் ...என்ன பாத்தா பொண்ணுங்க பின்னாடி போற மாதிரி இருக்கா என்று கேட்க ...

இல்லை என்று தலையை அசைத்தாள்... அப்புறம் எதுக்கு இப்படி ஒரு கேள்வி ...என்ன பத்தி நல்லா புரிஞ்சுக்கோ யுகா நான் யாருகிட்டயும் இந்த அளவு பேசுனது கிடையாது... ஆனால் உன்கிட்ட பேச ஒரே காரணம் என்னை பத்தி புரிய வைக்கணும்ங்கிறதுக்காக தான்... நான் கெட்டவங்களுக்கு மட்டும் தான் கெட்டவன் உனக்கு இல்லை ...நானும் பார்த்த உடனே லவ் வரும் அப்படின்னு நினைக்கல ... ஆனா உன்னை பார்த்த உடனே புடிச்சது இப்ப வரைக்கும் உன்னை மட்டும்தான் பிடிக்குது ...

உன்னையும் யாஷையும் எந்த காரணத்துக்காகவும் நான் தப்பா சொல்ல மாட்டேன் ..அவனை உன்கிட்ட இருந்து பிரிக்க மாட்டேன்... அவனையும் உன்னை விட்டு பிரிய விடமாட்டேன்... என்னை உறுதியா நம்பலாம்... உனக்கு இவ்வளவு நாள் கிடைக்காத சந்தோஷம் எல்லாத்தையும் சேர்த்து கொடுக்க தான் நான் காத்திருக்கிறேன் என்று அவன் மதியின் இரு கன்னங்களை தனது கரங்களில் ஏந்தி கொண்டு நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்...

அவள் கண்களில் கண்ணீர் வழிய உங்க வீட்ல உங்க கிட்ட எந்த பிரச்சனையும் பண்ணலையா என்றால் பயந்து கொண்டே... எங்க வீட்ல நான் எந்த முடிவு எடுத்தாலும் சரின்னு சொல்றவங்க தான் டி.. அதுவும் இல்லாம நான் உன்கிட்ட அன்னைக்கு தப்பா நடந்துகிட்டேன் ஞாபகம் இருக்கா ...நீ கூட காலையில எந்திரிச்ச உடனே வீட்டை விட்டு ஓடி போனியே... அப்போ முதல்ல போன் பண்ணி எங்க அப்பா கிட்ட தான் விஷயத்தை சொன்னேன்...

கேவலமா திட்டினாரு... வேகமா வந்து உன்னை காப்பாத்தி மத்த சண்டை எல்லாம் முடிஞ்சு ... அப்புறம் உன்னை வீட்ல விட்டுட்டு உடனே டாடி கிட்ட போய் தான் என்ன நல்லா வாங்கி கட்டிகிட்டேன்... முதல் முறை எங்க அப்பா என்னை அடிச்சாரு... அப்புறம் லவ் பண்றேன்னு எல்லாமே சொன்னேன்... யோசிச்சுட்டு அந்த பொண்ணை நல்லா வாழ வை அப்படின்னு சொல்லிட்டு போயிட்டாரு...

இராவணனின் சீதை 💖Where stories live. Discover now