இராவணனின் சீதை 26 💖

1.1K 27 13
                                    

சதாசிவம் மகனிடம் பேசிவிட்டு கீழே வருகையில் அவரை பார்த்த சிவகாமி என்ன ஆச்சுங்க... என்ன சொன்னான் தேவா... எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஒரு கல்யாணம் ஆனா பொண்ணை பார்த்து எதுக்காக நம்ம பையன் இந்த மாதிரி சொல்லணும்... அவனை நான் எப்படி வளர்த்தேன் என்று கண்கலங்கி சிவகாமி கேட்டவுடன்... அந்த பொண்ணு உன்னோட மருமக தான்...

அவ வயித்துல வளர குழந்தை நம்ம வீட்டு வாரிசு... அதனை உறுதியா நம்பலாம் என்று கூறியவர் மகன் பற்றிய வருத்தத்தில் கட்டிலில் படுத்து கண்களை மூடிவிட்டார்... அவன் இவ்வளவு இறங்கி வேலை செய்தது அவன் உயிர் நண்பனுக்காக ... ஆனால் அதில் அவன் வாழ்க்கையே பாதை மாறி சென்று விட்டது என்பதை அறிந்த தந்தையின் உள்ளம் மிகவும் வேதனையை பிரதிபலித்தது...

சிவகாமி அந்த பொண்ணு தான் நம்ம மருமகளா என்று அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் கணவனை பார்த்தவரே படுத்துக்கொண்டார் ...மகன் புத்திசாலி... ஆனால் அடங்காதவன் என்று அவருக்கு தெரிந்தது தான்...அவன் கூறும் வரை கேட்க கூடாது என்று நினைத்தார்...அதிகாலை சீக்கிரம் எழுந்து வொர்க் அவுட் செய்த தேவேந்திரன் மனதில் மதியை எப்படி நெருங்குவது என்று எண்ணமே மேலோங்கி இருந்தது...

குளித்து முடித்து காக்கி சட்டையில் தன்னை திணைத்துக் கொண்டவன் யோசித்துக் கொண்டே வெளியே வந்தான்... வீட்டின் வாசலிற்கு அவன் வந்ததும் சரியாக அவன் அருகில் வந்து வண்டியை நிறுத்தினார் வரதன்...அவரைப் பார்த்து சிரித்த தேவா உள்ளே திரும்பி சாரதி சாரா ரெண்டு பேரும் வாங்க என்று தன் அண்ணன் குழந்தைகளை அழைத்தான்..

இருவரும் வேகமாக அவன் அருகில் வந்து சித்தப்பா ஸ்கூலுக்கு நேரம் நைட் சீக்கிரம் வண்டி எடுக்க சொல்லு என்று அவசரமாக உள்ளே அமர்ந்தனர் ...மதி பணிபுரியும் பள்ளியில் தான் இருவரும் படிக்கின்றனர்... சாரதி மூன்றாம் வகுப்பிலும் சாரா முதல் வகுப்பிலும் படிக்கிறார்கள் ...ஆனால் அவள் இந்த ஊரை வந்தடையும் முன்னரே முன்னே மதி எங்கு இருக்கிறாள் என்பதை விக்ரம் அறிந்து வைத்திருந்தான்....

இராவணனின் சீதை 💖Où les histoires vivent. Découvrez maintenant