இன்றுடன் விக்ரம் மதியை பார்த்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது... இடையில் ஒரு முறை அழைத்து பேசினான் அவ்வளவுதான் ...அவனது வேலை கடினமானது என்று தெரிந்தாலும் அவனிடம் பேசாமல் இருப்பது மிகுந்த வேதனையை தந்தது ...முன்பு இருந்தது போல ரவுடியாக இருந்திருந்தால் அவனுக்கு ஏதாவது ஆகி இருந்தாலும் எனக்கு என்ன என்று இருந்திருப்பால் போல ...
ஆனால் இப்பொழுது உயிருக்கு உயிராக இருப்பவனை இழக்க அவள் மனம் வரவில்லை... தேவ் அவளுக்கு எவ்வளவு சமாதானம் கூறினாலும் அவள் முகம் வாட்டமாகவே இருந்தது.... அவருக்கு ஏதோ பிரச்சனை அதான் என்கிட்ட பேச மாட்டாரு என்று கண்ணீரில் கரைவாள்.... இவ்வளவு நாள் இருந்த தனிமை கூட அவளுக்கு இவ்வளவு வலி இல்லை ... அவளுக்கு உயிரான யாஷ் அருகில் இருக்கிறான் அதுவும் அவள் மூளையில் பதியவில்லை...
இப்பொழுது எல்லாம் மித்ரா மதியுடன் உறங்குகிறாள்... அவர்களுக்கு துணையாக யாஷ் பக்கத்து அறையில் தான் உறங்குகிறான் ...அதுவும் இல்லாமல் தனது தாய் தந்தையருக்கு அழைத்து இங்கே வர சொல்லி கட்டளையிட்டு இருந்தான் ... வேந்தன் ஜீவானந்தம் இருவரும் அவளை தாங்க சற்று கவலை மறந்து இருந்தால்.... பிரணிதா பிரணித் இருவரும் அக்காவை பேசியே மனதை திசை திரும்பினர்.... இத்தனைக்கும் இடையிலும் சட்டென முகம் மாறிவிடும்...
இப்படியே இருந்தால் சரிப்பட்டு வராது என்று அடுத்த நாள் அவளை பள்ளிக்கு அழைத்து சென்றான் யாஷ்... அங்கு பிள்ளைகளுடன் இருந்தால் சற்று நேரம் அவனை மறந்து தனது வேலைகளை பார்ப்பாள் என்று அழைத்து சென்றான்... அதேபோல் பள்ளியில் அனைத்தும் மறந்து தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தால் ...ஆனால் இரவு என்று ஒரு கொடுமை அவளை மிகவும் தாக்கியது... தனியாக இருந்த போது தன்னை சுற்றி யாரே இருப்பது போல் தோன்றும்... அதை விக்ரம் ஆவி என்று நினைத்து கொள்வாள்... ஆனால் அது ஆவி இல்லை அந்த பாவி தான் என்று அவன் கூறிய பிறகே உணர்ந்தால்...
செய்தியில் ஏதாவது அசம்பாவிதம் சம்பவம் பற்றி போட்டாள் பதறியபடி வந்து செய்தியை பார்ப்பாள்... அதில் யாருக்காவது ஆபத்து நேர்ந்திருந்தால் அதற்கும் அழுவாள்... இப்படித்தான் இருக்கும் என்று சாவித்திரி கூற... யாஷின் தாயும் ஆமா கர்ப்பமா இருக்கும் போது மனநிலை இப்படித்தான் மாறி மாறி இருக்கும்... நீ கவலைப்படாதே என்று அவளை தேற்றி வந்தனர் ....
STAI LEGGENDO
இராவணனின் சீதை 💖
Storie d'amoreஇராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை எடுத்து அவன் மன சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை கொடுத்தான். அவளும் அந்த சிறையில் விரும்பியே அடைந்து கொண்டாள் அந்த இராவணனின் சீதையாக .