ஜானகி வளைகாப்புக்கு நீங்களும் இருக்கணும் தம்பி என்று ரேகா மற்றும் லதா கேட்டுக்கொள்ள... கண்டிப்பா நான் இல்லாம என் ஜானுவுக்கு வளையல் காப்பா ..கண்டிப்பா இல்ல ....உன் வளைகாப்புல நான் கலந்து கொள்ளலாமா ஜானு என்று கேட்க... என்ன யாஷ் புதுசா பர்மிஷன் கேட்டுக்கிட்டு... எனக்கு எல்லார விடவும் நீ முக்கியம் ...
நீ இந்த சந்தோசத்தை பார்க்க முடியாம போய்டுவியோன்னு நான் இவ்வளவு நாள் இதை தள்ளி வச்சேன்...ஆனா அக்கா கேட்டதும் மறுக்க முடியாம சரி சொல்லிட்டேன்.... இப்போ நீ என் கூட இருக்க .. எவ்வளவு சந்தோசமா இருக்கன்னு வார்த்தையால சொல்ல முடியல...அப்பா தம்பி தங்கச்சி சித்தி மாமா அத்தை எல்லாரையும் பாக்கணும் போல எனக்கும் அப்பப்ப தோணும்... ஆனா எல்லாரும் வேணான்னு விட்டுட்டு வந்துட்டேன்...
அதனால என்ன வெறுத்து இருப்பாங்கன்னு நானும் திரும்ப வரல என்றால் வயிற்றை பார்த்தபடியே ...அவள் கூறியதன் அர்த்தம் மித்ரா மற்றும் யாஷுக்கு புரிந்தது.. ஆனால் காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை என்று ரேகா லதா புரிந்து கொண்டனர்.... அந்நேரம் வரதன் வந்தார் என்ன லதா நம்ம வீட்ல இருப்பேன்னு பாத்தா ஜானகி கிட்ட பேசிட்டு இருக்கியா என்று உள்ளே நுழைந்தார்...
யாஷை பார்த்துவிட்டு யார் என்பது போல் மனைவியிடம் செய்கையிலே கேட்டார்... இது நம்ம ஜானகியோட மாமா பையன் அவரோட பொண்டாட்டி ...புள்ளைய காணோம்னு இப்பதான் கண்டுபிடிச்சிருக்காங்க என்று நடந்ததை மேலோட்டமாக கூறினார்... அப்படியா.. வாங்க தம்பி வாம்மா என்று கூறியவர்.. ஜானகி உனக்காக உனக்கு புடிச்ச திராட்சை வாங்கினேன் மா ...
அதோட ஏசிபி வேற நிறைய பழம் வாங்கி கொடுத்து விட்டார் என்று அதிலிருந்து சிலதை ஜானகி பைக்கு மாற்றியவர் எடுத்து போ டா ...சாப்பிட்டு உடம்ப தேத்து என்றவர் மனைவி கையில் மற்றொரு பையை கொடுத்தார் ...பின்னர் தன் மனைவியிடம் இன்னைக்கு ஏசிபி வீட்ல ஏதோ பங்க்ஷன்... நீயும் என் கூட வரனும் லதா ...வருண் எங்க அவனையும் கூட்டிட்டு போகணும் ..
![](https://img.wattpad.com/cover/325373225-288-k928834.jpg)
YOU ARE READING
இராவணனின் சீதை 💖
Romanceஇராவணன் தான் இவன் . அன்பை கொடுப்பதிலும் அவளை காப்பதிலும் . அவள் தொலைத்த புன்னகையை மீண்டும் கொடுக்க காதல் சிறை எடுத்து அவன் மன சிறையில் ஆயுள் கைதியாக தண்டனை கொடுத்தான். அவளும் அந்த சிறையில் விரும்பியே அடைந்து கொண்டாள் அந்த இராவணனின் சீதையாக .