episode 1

26.2K 330 53
                                    





கடலன்னை அழகுபடுத்தும் அற்புதமான நகரமாம் புதுச்சேரியின் புறவழிச்சாலையில் மிக பிரம்மாண்டமாக எழுந்து நின்றது அன்னை மீரா கலைக்கல்லூரி. இருபாலர் படிக்கும் சிறந்து கல்லூரிகளுள் இக்கல்லூரியும் ஒன்று.மாணவர்கள் ஒவ்வொருவராக கல்லூரிக்குள் வந்தவண்ணமிருந்தனர்.செமஸ்டர் விடுமுறையினால் சில நாட்கள் மாணவர்களின் சத்தம்கேட்காதிருந்த கல்லூரி வளாகம் அவர்களின் முதல் நாள் வருகையை வரவேற்கும் வண்ணம் தங்கள் மரங்களிலிருந்து மலர்களை அவர்கள் மேல் தூவியது போல தோற்றமளித்தது.

" டேய் மச்சான் நமக்கு புதுசா வர லெக்சரர் யாருடா எதாவது தெரியுமா.?" என்று ஒருவன்  தன் நண்பனிடம் வினவ , அதற்கு அந்த நண்பனோ," தெரியலடா யாரோ ஒரு பெண் தான் வராங்க. மத்தபடி எந்த விபரமும்  தெரியல,  ஆனால் அந்த ஸப்ஜெக்ட்  ரொம்ப கஷ்டம் வர்ரவங்க நமக்கு புரியரமாதிரி போர்  அடிக்காம எடுத்தா நல்லா இருக்கும் டா." என்று தன் எதிர்பார்ப்பை வெளியிட்டான்.

"என்னடா காலையிலயே சோக கீதம் வாசிக்கறீங்க ", என்று வகுப்பறைகுள் நுழைந்தான் ஷங்கர்.

" வாடா மச்சி சும்மா புதுசா வரப்போகுற லெக்சரர் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்டா ,"என்று பதில் அளித்துவிட்டு  பின் தங்களது வழக்கமான அரட்டையை தொடர்ந்தனர். வகுப்பறைக்குள் ஓவ்வொருவராக வரத்தொடங்கி விட்டதால் அமைதியாக இருந்த இடம் சலசலக்கத்துவங்கியது.

இறுதி ஆண்டு வகுப்பிலிருந்து தான் மேற்கூறிய சம்பாஷனைகள் கேட்டது.

     
அந்த கல்லூரியின் பேராசியர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில்
கார்முகிலன் அன்று தான் எடுக்கும் வகுப்பிற்கு தயார் ஆகிக்கொண்டிருந்தார்.    

அப்பொழுது   பியூன் ,"உங்களை   பிரின்சிபால் சார்  கூப்பிட்டாங்க சார் ,"என்றபடி உள்ளே வந்தார்.  "இதோ வந்துடேன் அண்ணே நீங்க போங்க," என்று வேகமாக முதல்வர் அறையை நோக்கி சென்றார் கார்முகிலன்.

                  பெருமாள்சாமி, என்ற பெயர் பலகை தாங்கிய அறை கதவை தட்டிய முகிலன்.

"வாங்க Mr. கார்முகிலன் , "  என்ற கம்பீர குரல் கேட்டு உள்ளே நுழைந்தார்.

"குட் மார்னிங் சார் சொல்லுங்க சார்."

"அடாமிக் ஃபிசிக்ஸ்(atomic physics) எடுக்க  அன்னிக்கு நடந்த இன்டர்வியூல செலக்ட்ஆன கேன்டிடேட் பத்தி எல்லா விவரமும்  இதுல இருக்கு நீங்க இன்டர்வியூக்கு நீங்க இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும்."என்று கூறியபடி முகிலனின் கைகளில் ஒரு கோப்பை(file)கொடுத்தார்.

   " சாரி சார் அன்னிக்கு கொஞ்சம் முக்கியமான வேலையில வரமுடியாம போயிடுச்சு.  "என்று கூறியவாறே அந்த கோப்பை கையில் வாங்கினார்.

"பரவாயில்லை  நீங்களும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு தான் சொல்றேன்."

"என்ன சார் உங்க செலக்க்ஷன் எப்பவும் தப்பாது. "

"சரி மிஸ்டர்.கார்முகிலன்  இந்த ஃபைல் உங்க கிட்டயே இருக்கட்டும்.அவங்க நாளைக்கு ஜாயின் பன்றாங்க.நீங்க அவங்களுக்கு கைட் பண்ணிடுங்க நான் நாளைக்கு வரமுடியாது ."

"ஓகே சார்  நான் பாத்துகிறேன்." என்று கூறி விடைபெற்றார்.

ஸ்டாஃப் ரூம்

"ஹாய் முகிலா எங்கடா போயிருந்த இவ்வளவு நேரமா ஆளையே காணோம்?" முகிலனின் நெருங்கிய தோழன் மற்றும் உடன் பணிபுரியும் கௌதம் வினவ,"பிரின்சிபல் சாரை பார்க்கப்போயிருந்தேன் டா. நாளைக்கு புதுசா ஜாயின் பண்ற லெக்சரரோட  ஃபைல்  கொடுக்க கூப்பிட்டார்." என்று கூறிய முகிலன் தன் நண்பனை நோக்கி," சரி உனக்கு இப்ப கிளாஸ் இருக்கா? என்று வினவினான்.

"ஆமா , உனக்கும் இப்ப கிளாஸ்க்கு போகனும் ல?" என்று தன் நண்பனிடம்

"ஆமாடா  சரி வா கிளாஸ் முடிச்சுட்டு இந்த ஃபைல பாக்கலாம் ,"என்று இருவரும் தத்தமது வகுப்பிற்கு சென்றனர்.

கார்முகிலன் Msc Mphil physics ,physics Department HOD .கம்பீர தோற்றம் 6 அடி உயரம் ஆண்மை நிறைந்த முகம் மாநிறம். யாரும் நெருங்க முடியாத தோற்றம் கொண்ட பண்பு மிக்க இளைஞர்.
இளம்வயதிலையே தனது அறிவாற்றலினால் ஒரு துறையின் தலைவர் பொறுப்பை தனதாக்கி கொண்டவர். நல்ல அறிவாளி மாணவர்களின் மனம் அறிந்து நடத்தும் ஆசிரியர்.

கௌதம்சந்திரன் முகிலனின் நெருங்கிய சிறு வயது தோழன்.இருவரும் பள்ளிமுதல் கல்லூரி வரை இணைந்தே படித்தனர் வேலைவாய்ப்பும் ஒரே நிறுவனத்தில் அமைய அவர்களின் நட்பு இனிய பயணித்தது.







நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)Where stories live. Discover now