சென்னையில் உள்ள பெரிய மண்டபங்களில் ஒன்றான லெஷ்மி மஹால் முழுவதும் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் நிறைந்திருந்தனர்.
எங்கும் எதிலும் பணத்தின் ஆளுமை தெரிய அலங்காரங்கள் ஜொலித்தன.அங்கு வந்தவர்களை வரவேற்பதற்காகவே தனிக்குழு அமைக்கப்பட்டிருந்தது.அவர்கள் இங்கும் அங்கும் சென்று ஒரு நிமிடம் போலும் ஓய்வெடுக்க முடியாமல் வரவேற்கும் அளவிற்கு மண்டபம் நிறைந்து வழிந்தது.
நடுநாயகமாக போட்டிருந்த அலங்கார மேடையில் கோல்டன் நிற பட்டுடுத்தி அதற்கேற்ப வைரத்தினாலான ஆபரணங்கள் அணிந்து தலைமுதல் கால்வரை நாணத்தால் சிவந்திருக்க , வைரத்தின் மினுமினுப்போடு செந்நிறமும் சேர்ந்து போட்டி போட வானுலக தேவதை பொறாமைபட அங்கு நின்றுகொண்டிருந்தாள் மவர்வதனி.
அவள் அருகினில் உலகை வென்றுவிட்ட கர்வத்துடன் சந்தன நிற ஷெர்வாணியில் , இளவரசனிற்கு குறையாத அழகுடனும் மலரின் மீது பொங்கி வழியும் காதல் பார்வையுடனும் நின்றுகொண்டிருந்தான் கார்முகிலன்.
இருவருக்கும் இன்று உலகறிய ரிசப்ஷென் நடந்துக்கொண்டிருந்தது.
கீழே அவர்களின் தோழர்களும், தோழிகளும் , உறவினர்களும் அமர்ந்திருக்க அதில் அமர்ந்திருந்த கௌதமின் உள்ளம் ஆனந்தத்தில் திலைத்திருந்தது.அவனின் மனமோ ஒரு வாரத்திற்து முந்திய நிகழ்வை நினைவு கூர்ந்தது.
அன்று மலரின் தாய் குருவிற்கு கால் செய்து வரச்சொன்னவுடன் வேகமாக கிளம்பிய குரு தன் கைபேசியை வீட்டிலே வைத்துவிட்டு சென்றுவிட்டான். அவன் சென்ற சிறிது நேரத்தில் அவன் மொபைல் பாட அங்கிருந்த கௌதம் அதில் மின்னிய குருவின் தாத்தா பெயரை பார்த்ததும் ஆவலுடன் எடுத்து பேசலானான்.
" ஹலோ முகிலா.....? நல்லா இருக்கியா?" தாத்தா
" தாத்தா நான் கௌதம் பேசறேன், அவன் மொபைல வீட்ல வச்சிட்டு போய்டான்."
" ஓ..... அப்படி மறந்து வச்சிட்டு போற அளவிற்கு என்ன அவசரம் கௌதம்."
YOU ARE READING
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
Romance#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.