கோயமுத்தூரின் புறநகர் பகுதியில் அந்த பெரிய அரண்மனை கம்பீரமாக வீற்றிருந்தது.எங்கும் எதிலும் பணத்தின் பிரதிபலிப்பே தெரிந்த அந்த அரண்மனை யின் தோட்டத்தில் அந்த வீட்டின் தலைவர் தன் துணைவியுடன் அந்த மாலை பொழுதை கழித்துக்கொண்டிருந்தார்.
வயது 80 ஐ நெருங்கிய போதும் அவரின் கம்பீரம் சிறிதும் குறையாமல் கச்சிதமான உடற்கட்டுடன் காணப்பட்டார்.அவரின் மனைவியோ மஞ்சள் பூசிய முகத்துடன் சிறிது சோசகம் முகத்தில் தெரிய தன் கணவரின் அருகில் அமர்ந்திருந்தார்.
தன் கணவர் சந்திரசேகரிற்கு தேவையான காபியை அவர் கைகளில் கொடுத்துவிட்டு அவர் பருக தொடங்கும் வரை பொறுத்தது போல," நல்லா..... குடிங்க அந்த ஒரு வேலை மட்டும் தானே நீங்க சரியா செய்றது," என்று தன் புலம்பலை துவங்கினார்.
தன் மனைவியை கேள்வியின் பொருள் புரிந்த போதும்," என்ன ருக்கு உனக்கு தெரியாததா, எனக்கு காபி னா எவ்வளவு இஷ்டம் னு." என்று அவரை சீண்டினார்.
" ஏங்க நீங்க இங்க காபியை ரசிச்சு ருசிச்சு குடிக்கறீங்க ஆனால் நம்ம வீடு இருக்குற நிலையை நினைச்சு பார்குறீங்களா?"
" ஏன் மா நம்ம வீட்டுக்கு என்ன அழகா கம்பீரமா இருக்கு ."
" ம்கும்...... வீடு அழகா இருந்தா மட்டும் போதுமா அதுல வாழ்றவங்க நல்லாவும் சந்தோஷமாவும் இருக்க வேண்டாமா? எப்படி இருந்த வீடு யாரு கண்ணு பட்டுச்சோ இப்படி ஆகிடுச்சு."
" எப்படி ஆயிடுச்சு னு புலம்புற நீ? சொல்றத தெளிவா சொல்லு ருக்கு", என்ற சந்திரசேகரின் குரலில் கடினம் கூடியிருந்தது.
" என்னங்க தெரியாத மாதிரியே பேசறீங்க, என் பையன் ராஜகுமார் அவன் மனைவிகிட்ட பேசியே மூனு வருஷம் ஆகுது, என் பேத்தி நிறைமதி சந்தோஷமான பட்டாம்பூச்சியா இந்த வீட்டை சுத்தி வந்த பொண்ணு இப்ப சிரிப்ப மறந்து கடனே னு வாழ்ந்துகிட்டு இருக்கு, எல்லாதுக்கும் மேல என் ஆசைபேரன் சனிக்கிழமை ஆனதும் ஓடி வந்து நம்மளை பாக்குறவன் இங்க வந்தே மூனு வருஷம் ஆச்சு , இதை யெல்லாம் சரிசெய்ய வேண்டிய நீங்களோ இங்க ஜாலியா உட்காந்து காபிய ரசிச்சு குடிச்சிக்கிட்டு இருக்கீங்க." தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தார்.
YOU ARE READING
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
Romance#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.