பெண்கள் என்றாலே ஓடும் ஒருவன் கல்யாணத்தின் மீது நாட்டம் கொள்ளாத ஒருவன் தன் தங்கையை மணக்க கேட்டதை நம்ப முடியாமல் பார்தான் விஷ்.
"என்ன தேடுற விஷ்."
"இல்ல இங்க பிரபா னு ஒரு நல்லவன் இருந்தானே நீ பாத்தியா?"
"போடா என்ன கேளி பண்ணாத."
"டேய் மச்சான் எப்ப இருந்து டா நீ வெக்கப்பட ஆரம்பிச்ச ?என்னடா நடக்குது இங்க ?உனக்கு எப்படி டா மலர தெரியும்"
"நிப்பாட்டு,நிப்பாட்டு , ஒவ்வொரு கேள்வியா கேளுடா.எனக்கு பதில் சொல்ல சந்தர்பம் தராம நீயே பேசுனா என்ன அர்த்தம்."
"சரிடா நான் பேசல நீயே என்ன நடந்துச்சுன்னு சொல்லு "
" நேத்து ஒரு ப்ரெண்ட பார்க்க போயிருந்தேன்,அவன் ஒரு காலேஜுக டான்ஸ் ப்ரோகிராமுக்கு ஜட்ஜா போக கெளம்பிக்கிட்டு இருந்தான்,என்னையும் கூப்பிட்டான்,அதனால நானும் போனேன்."
அங்க ஒரு பொண்ணு ஆடுன டா பாரு நான் அசந்து போய்டேன்,அப்படி ஒரு உணர்ச்சிய முகத்துல கொண்டு வந்தாபாரு சான்சே இல்லைடா. அப்பவே அவ தான் என் மனைவி னு முடிவு பண்ணிட்டேன்.அப்பறம் அவள பத்தி தெரிஞ்சுக்க அவளை ஃபாலோ பண்ணி வந்தேன்,அப்ப தான் அவ உங்க வீட்டுக்குள்ள போறத பாத்தேன்.
அவ உன் தங்கச்சின்னு தெரிஞ்சு ரொம்ப சந்தோஷபட்டேன் மச்சான்.
இப்ப உங்கிட்ட அத மத்தி பேச வந்திருக்கேன்.போதுமா இல்லை இன்னும் எதாவது டீரடெய்ல்ஸ் வேணுமா?"ரொம்ப சந்தோஷம் பிரபா ,உன்னை மாதிரி ஒருத்தன கல்யாணம் பண்ணிக்க என் தங்கச்சி கொடுத்து வச்சிருக்கனும்.நான் இத பத்தி இன்னைய்கே அப்பாகிட்ட பேசுறேன்.நீ எதுக்கும் தயாரா இரு ,உனக்கு நான் கால் பண்றேன்."
( மிக சாமர்தியமாக அவள் வேறு ஒருவனை பார்த்து ஆடியதை மறைத்து விட்டான் அவன்.)
இருவரும் சந்தோஷமாக விடைபெற்றனர்
அன்று இரவு மலர் தனது அறையில் குருவுடன் சந்தோஷமாக பேசிக்கொண்டிருந்தாள் அப்போது வந்த பணியாள்,"சின்னமா ,உங்களை ஐயா கூட்டிட்டு வர சொன்னாங்க,"
YOU ARE READING
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
Romance#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.