கார்முகிலனும் மலர்வதனி யும் தங்களின் திருமணத்திற்கு பிறகு கார்முகிலனின் சென்னை ஈ.சி.ஆர்கெஸ்ட் ஹவுஸ் முன்பு தங்கள் வாகனத்தை நிறுத்தி வீட்டின் உள்ளே நுழைய முற்படுகையில் " அங்கயே நில்லுடா" என்ற அதட்டலை கேட்டு ஒரு நிமிடம் தாமதித்த குரு சிரித்துக்கொண்டே மேலே நிமிர்ந்து நோக்கினான் , அங்கு நின்றுகொண்டிருந்த வரை பார்த்து "ஹாய் ஸ்வீட்டி வாட் எ ஸ்வீட் சர்ப்ரைஸ் ( hi sweety, what a sweet surprise)? " என்று குரலில் மகிழ்ச்சி பொங்க வினவினான்.
அவனை நோக்கி வந்தவரோ சிரிப்பு துடைத்த முகத்துடன், "டேய் யாரை கேட்டு இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு வந்து நிக்கிர?" முகத்தில் கோபம் கொப்பளிக்க கேட்ட தன் தாயை குழப்பத்துடன் நோக்கினான் குரு, " ஏன் மா உங்களுக்கு இதுல விருப்பம் இல்லையா?" குழப்பம் குறையாமலே கேட்டான்.
"சுத்தமா எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லை."
"ஆனால் நான் உங்ககிட்ட இதுவரை எதையும் மறைச்சது இல்லையே மா,மலரோட அறிமுகமானதுல இருந்து எல்லாமே உங்ககிட்ட சொன்னேனே."
" ஆமா நீ எதையும் மறைச்சது இல்லை தான், ஆனா நான் உனக்கு இந்த விஷயத்துல எந்த பதிலுமே குடுக்கலையே?"
தன்னுடைய கூற்றிற்கு தன் தாயிடமிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை என்று மிகவும் தாமதமாகவே உணர்ந்தான் அவன்.
" நீ அந்த பொண்ண பத்தி சொல்லும் போதெலாம் இது வயசு கோளாறு கொஞ்ச நாள்ள சரியாகிடும் அப்படீ னு நினைச்சேன். ஆனா நீ இப்படி ஒரு காரியத்தை பண்ணிட்டு வந்து நிப்பனு சத்தியமா நான் எதிர்பாக்கலை."
" அம்மா நான் என்னை சின்ன குழந்தையா, இல்லை முடிவெடுக்க தெரியாத முட்டாளா?" குரலில் சிறு கோபம் துளிர்விட கேட்ட குரு வை முறைத்த அவன் தாய் ," என்னடா என் முன்னாடி யே குரலை உயர்த்தி பேசுற?
அந்த அளவுக்கு மரியாதையெல்லாம் மறந்து போக வைச்சுடாளா?"அம்மா ப்ளீஸ் நான் மலரை லவ் பண்ணது உங்களுக்கு நல்லா தெரியும் , நான் அவளை கல்யாணம் பண்ணிண சூழ்நிலையும் தெரியும், ஒரு வேளை இப்ப அப்படி ஒரு சூழ்நிலை வரலை னா , அவனை பேச விடாமல் இடை புகுந்த அவன் தாய்," போதும் நிருத்து முகில் , நீ சொன்னதெல்லாம் எனக்கு தெரியும் ஆனா நீ இவளை கல்யாணம் பண்ணிக்கனும் னு நான் ஆசை படலை. என் அண்ணோட பொண்ணு மாலினி ய உனக்கு கல்யாணம் பண்ணிவைக்கிறதா நான் வாக்கு குடுத்திருக்கேன் அப்படி இருக்கும் போது நீ இப்படி ஒரு அசிங்கமான காரியத்தை பண்ணிட்டு வந்து நிக்கிரியே? அவர் மேலும் தொடர்ந்தார்," நம்ம அந்தஸ்த்து, மரியாதை ,உங்க அப்பாவோட கௌரவம் இப்படி எதையாவது நீ யோசிச்சயா?, எவளையோ லவ் பண்ணி திடீர்னு திருட்டு தனமா தாலி கட்டிட்டு ,தைரியமா வீட்டுக்கே கூட்டிட்டு வந்து நிக்கரயே உன்னை என்ன பண்ணா தகும்?
YOU ARE READING
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
Romance#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.