Episode 24

6.1K 217 41
                                    

               

பழைய நிகழ்வுகளின் தாக்கத்தை தாங்க முடியாத மலர் அதற்கு.மேல் சிந்திக்க முடியாதவளாய் நிகழ்வுலக்த்திற்கு திரும்பினாள்.அவளின்  கண்களிலிருந்து கண்ணீர் வந்துகொண்டே இருந்தது ,ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த முடியாமல் வெடித்து அழ துவங்கினாள்.

மலர் அழும் சத்தம் கேட்டு உள்ளே நுழைந்த மலரின் தாய் சாரதா , தன் மகள் அழுவதை கண்டு வேகமாக அவளருகில் சென்று அவளை தன் மீது சாய்த்துக்கொண்டார். இரண்டு வருடங்களாக தேக்கி வைத்திருந்த கண்ணீர் மடை திறந்த வெள்ளமென வெளிவந்ததை நினைத்து சிறு ஆசுவாசமடைந்தது அந்த தாயுள்ளம். அவளை அழவிட்டு முதுகில் தடவிகொடுத்தார்.

தன் தாயை நிமிர்ந்து பார்த்த மலர்," நான் என்ன தப்பு மா செஞ்சேன்? எதுக்காக எனக்கு இவ்ளோ பெரிய தண்டனை. என்ன ஏன் மா பெத்தீங்க கருவுல யே என்னை கலைச்சு இருந்தா நான் இவ்ளோ கஷ்டப்படாம நிம்மதியா இருந்திருப்பேன் ல, ஏன் மா நான் எவ்ளோ சந்தோஷமா பட்டாம்பூச்சியா தாத்தா, பாட்டி கூட இருந்தேன். அவங்களோட எதிர்பாராத மரணத்தால நான் உடைஞ்சு போய்டேன், அந்த அதிர்ச்சில இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தேன் , அப்பதான் என் குருவை சந்திச்சேன். பாலைவனத்துல கிடைச்ச பழச்சாறு மாதிரி என்னோட வாழ்க்கையில வந்தாரு. இனிமையா இரண்டு வருஷம் சந்தோஷமா வாழ்ந்தேன் யாரோட கண்ணு பட்டுச்சோ தெரியல கைல கிடைச்ச வாழ்க்கையோட சந்தோஷத்த அனுபவிக்கிறதுக்கு முன்னாடியே கடவுள் அந்த வாழ்க்கைய என் கைல இருந்து பிடிங்கிட்டாரு.
இன்னைக்கு என் கண்ணு முன்னாடி என் புருஷன பார்த்தும் சொந்தம் கொண்டாட முடியாத அபாக்கியவதியா , கோழை மாதிரி இங்க வந்து அழுதுட்டு இருக்கேன். என்னால தாங்க முடியலை மா ,எனக்கு வாழவே பிடிக்கலை. எனக்கு மட்டும் ஏன் இப்படிலாம் நடக்குது? "என்று தேம்பி அழும் மகளை ஆசுவாசப்படுத்தி தன்னுடைய தூக்க மாத்திரை யை பாலில் கலந்து அவளை வலுகட்டாயமாக பருக வைத்தார்.

பாலை குடித்துவிட்டு புலம்பியபடி யே இருந்த மலர் சிறிது நேரத்தில் கண் அயர்ந்தாள்.

நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)Where stories live. Discover now