மலரை பிரிந்த நாள் முதல் மன அமைதியின்றி தவிப்புடனேயே குருவின் நாட்கள் கழிந்தது. மலரின் நலனை மலரின் அன்னையின் முலம் அறிந்தாலும் அவளது அருகாமைக்கு குருவின் மனம் ஏங்கியது.
தன்னவளை மூன்று வருடங்களுக்கு பிறகு இன்று நேரில் பார்த்ததாலும் தன் நண்பனிடம் தன் மனதை திறந்து காட்டியதாலும் குரு வின் மனம் அமைதியாக இருந்தது.அவனின் மன கவலைகள் மறைந்து இனிய கனவுடன் கூடிய சுகமான உறக்கம் அவனை ஆட்கொண்டது.
( குரு தன்னை எல்லோரிடமும் கார்முகிலன் என்றே அறிமுகப்படுத்தியதால் அனைவரும் அவனை கார்முகிலன் என்றே அழைக்கின்றனர். மலரை பிரிந்தவுடன் தன்னுடைய குரு அடையாளத்தை அவன் துறந்துவிட்டான். எனவே நாமும் இனி அவனை கார்முகிலன் என்றே அழைப்போம்.)
ஆனால் குருவின் நண்பன் கௌதமோ மிகுந்த யோசனையுடன் காணப்பட்டான்.அவனிற்கு தெரிந்த வரை கார்முகிலன் திறமையானவன், அடுத்தவரை பார்த்தவுடன் மதிப்பிடும் சக்தி கொண்ட புத்திசாலி, தப்பை தயங்காமல் தட்டிகேட்கும் தைரியமானவன், ஆனால் பெண்களின் அருகே நெருங்க தயக்கம் காட்டுவான் .
அப்படிபட்ட தன் நண்பனின் காதல் கதை அவனை ஆச்சரியப்படுத்தியது அவனின் காதலியை அவனுடன் சேர்த்து வைக்கும் கடமை தன்னுடையது என்ற உணர்ந்த அவன் அதற்காக செய்ய வேண்டியதை மனதில் குறித்துக்கொண்டு உறங்கச்சென்றான்.
அடுத்த நாள் காலை கதிரவன் தன் செந்நிற கதிர்களை பூமியின் மீது மெதுவாக அனுப்பி தனது ஆட்சியை நிலைநாட்ட தொடங்கிருந்த நேரம் மலரின் தாய் வழக்கத்தை விட சீக்கிரமாக துயிலெழுந்தார்.
தனக்காக காத்திராமல் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு வெளியே செல்லும் தன் மகள் , இன்று எழுவதற்கு முன்னரே வேலைகளை பார்க்க துவங்கினார்.
நேரம் வேகமாக சென்றுகொண்டிருந்ததே தவிர மலர் தன்னறையிலிருந்து வெளிவரவில்லை. எப்பொழுதும் 5 மணிக்கு எழும் தன் மகள் இன்று 7 மணி ஆகியும் வெளியே வராதது மலரின் அன்னைக்கு சிறு கவலையை கொடுத்தது. அவளின் அறையை தட்டிப்பார்த்தவருக்கு அமைதி மட்டுமே பதிலாக கிடைத்தது.
YOU ARE READING
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
Romance#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.