Episode 9

6.8K 249 31
                                    

கல்லூரி தொடங்கி ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில் ,ஒரு நாள்
அனிதாவும்,மலரும்  கேன்டீன் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மலர்,"ஏய் அங்க பாரு அங்க உட்கார்ந்து இருக்குறது நம்ம சௌமியாதான?" என தன் தோழியிடம் கேட்டாள்.

அனிதா,"ஆமா ஆனா அவ ஏன் இங்க உட்காந்து அழுது கிட்டு இருக்கா?"

"சரி வா போய் என்னனு பார்கலாம்".

இவர்கள் அந்த பெண்ணை நோக்கி சென்ற அதே நேரம்.

குரு,"அடடா இவங்களும் அந்த பொண்ணுகிட்டதான் வராங்களா? சரி அவங்க போனதுக்கு அப்பறமா நம்ம போய் பேசவாம் "என்று நினைத்து அந்த மரத்தின் பின்னே நின்றுகொண்டான்.

மலர்,"சௌமி என்னாச்சுடி? ஏன் இங்க தனியா உட்காந்து அழுதுகிட்டு இருக்க."

பதில் ஏதும் சொல்லாமல் அழுது கொண்டே இருக்கும் சௌமியாவை பார்த்த அனிதா,"ஏய் சேமியா என்னனு சொல்லேண்டி? "என்று அதட்டினாள்.

சௌமியா,"ம்ம் குரு ல குரு அவரு என்ன திட்டிட்டாரு."

"அவன் பெரிய இவனா? அவன் ஏன்டி ஒன்ன திட்டனும்? எப்ப பாத்தாலும் யாரயாவது திட்டிடே இருக்கான்.வாடி போய் பிரின்சிபால் கிட்ட கம்லெய்ன்ட் பண்ணலாம் ." என்று பொறிந்து தள்ளிய தனது தோழியை கன்டனப்பார்வை பார்த்தாள் மலர்.

"ஏன் மலர் என்ன முறைக்கிற நான் இப்ப என்ன தப்பா சொன்னேன்னு இந்த லுக் விட்ற."என்று கேட்டாள் அனிதா.

"கொஞ்சம் சும்மா இருக்கியா சௌமியா வின் பக்கம் திரும்பி நீ என்ன தப்பு பண்ண சௌமி" என்ற கேட்டாள்.

அங்கே நின்றிருந்த மூவரின் மனநிலையும் வேறாக இருந்து. அனிதாவோ ,"என்ன இவ இப்படிகேக்குறா?" என நினைக்க,சௌமியாவோ," அதுதான் எனக்கே தெரியல ?"என்று நினைத்தாள்.

ஆனால் இதற்கு காரணமான குரு வோ முற்றிலும் வேறு மனநிலையில் இருந்தான்.அவன் சிந்தனையை கலைத்தது அனிதாவின் குரல்.

அனிதா,"லூசாடி நீ என்ன கேக்குறேனு தெரிஞ்சுதான் கேக்குறியா."

மலர்,"நான் தெரிஞ்சுதான் கேக்குறேன் நீ தான் புரியாம பேசுற.நீயே யோசிச்சு பாரு,நாம இந்த காலேஜ்ல சேர்ந்து ஆறு மாசமாயிடுச்சு நாம வந்த அன்னைல இருந்த இப்ப வரைக்கும் நம்ம குரு வ பத்தி கேட்டுகிட்டுதான் இருக்கோம். யாராவது அவரு ஏன் அப்படி அடிச்சாரு னு கேட்ருப்பாங்களா? இல்லையே நல்லா வேனும் அவனுங்களுக்கு, குரு பண்ணது தான் சரி அப்படினு தான சொன்னாங்க. அப்பறம் ஏன்டி அவர திட்றே , நீங்களும் தட்டி கேட்க மாட்டீங்க ,கேக்குறவங்களையம்  என்கரேஜ்  பண்ணாம அவர என்னமோ ரௌடி மாதிரி நினைக்க வேண்டியது .எப்பதான்டி நீங்க எல்லாரும் மாற போறிங்க?என்று தன் ஆதங்கத்தை வெளியிட்டாள்.

அமைதியாக சௌமியா ,"எனக்கே தெரியலடி ,"என பாவமாக கூறினாள்.

மலர்,"சரி காலை ல நடந்ததை சொல்லு ".

காலையில் நடந்தவற்றை கூறினாள் சௌமியா.
அமைதியாக எல்லாவற்றையும் கேட்ட மலர் வேகமாக குனிந்து சௌமியாவின் உடையை பார்தாள்.

மலர்," நீ உன்னோட டிரெஸ்ஸை பாத்தியா?

சௌமியா,"ஏன்டி நல்லா தான இருக்கு ."

மலர்,"நல்லாதான் இருக்கு ஆனா ரொம்ப லோ நெக்கா இருக்கு சோ ,அவனுங்க உன்னை ஃபோடோ எடுத்துருக்கானுங்க , அதனால தான் குரு அவனுங்க மொபைல வாங்கிருக்காரு. நீ அவரு வற்றதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்த?"

சௌமியாவிற்கு பேச்சே எழவில்லை. சொல்ல நா கூசியது அவள் தலையை குனிந்து நின்றாள்.

அனிதாவை ஒரு கோப பார்வை பார்த்து விட்டு,பண்றதெல்லாம் நீங்க பண்ணிட்டு ஏன்டி என் டார்லிங் குரு வ தப்பு சொல்றீங்க ,கேட்க ஆள் இல்லைனு தானே திட்றீங்க இனிமே யாராவது அவர தப்பு சொல்லுங்க அப்ப இருக்கு உங்களுக்கு என தன் மனதில் இருந்த நெருக்கத்தால் தன்னையும் அறியாமல் உளறிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் மலர்வதனி.

சௌமியா குற்ற உணர்ச்சியில் இருந்ததால் அவள் கவணிக்கவில்லை. அனிதாவோ தோழியை திகைப்புடன் பார்த்து விட்டு தோழியின் மனதை புரிந்துகொண்டு அமைதியாகிவிட்டாள்.

ஆனால் குரு வோ தன்னை அவள் டார்லிங்என அழைத்ததை எண்ணி கோப்படாமல் ரசித்து சிரித்துக்கொண்டான். அவன் மனம் மலரை எண்ணி மகிழ்வடைந்தது.

நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)Dove le storie prendono vita. Scoprilo ora