Episode 13

6.6K 213 39
                                    


ஆடிட்டோரியம் விட்டு வெளியே வந்த மலரின் கண்கள் குருவை யே தேடின,தூரத்தில் நின்றுகொண்டிருந்த குருவோ மலரை காண கையில் பூங்கொத்துடன் வந்துகொண்டிருந்தான்.

"இந்த அழகு தேவதைக்கு அடியானின் அன்பு காணிக்கை."கையில் மலர்களை வாங்கிய
மலர்,"எப்படி இருந்துச்சு நான் ஆடுனது எதுவுமே சொல்லல."

" மலர் ப்ளீஸ் எங்கயாவது போலாமா?"

தன்தலைமுடியினை கோதி உணர்ச்சிகளை அடக்கினான்.இதை கண்ட மலரின் முகம் செவ்வானமென சிவந்தது.பதில் கூறாமல் அனிதாவிடம் கூறிவிட்டு குருவுடன் கிளம்பினாள்.

குருவை காதலிக்க தொடங்கியது முதல் இருவரும் கல்லூரியை தவிற வேறு எங்கும் சந்நித்தது இல்லை, முதல் முறையாக அவன் பின்னால் அமர்ந்து கர்வத்துடன் பயணித்தாள்.

குரு மலரை அழைத்து சென்றது ஓர் கடற்கரை. வாகனத்தை பார்க் செய்துவிட்டு இருவரும் கைகோர்த்து கடல் வரை சென்றனர்.இருவரது மனமும் அமைதியிலும் காதலிலும் திளைத்திருந்ததால் அங்கே வார்த்தைகள் தேவைப்படவில்லை.கடலை நோக்கி அமர்ந்து கொண்ட பின் மெதுவாக குருவின் தோளில் தன் தலைசாய்த்த மலர்.

"குரு நான் உங்ககிட்ட மனசு விட்டு பேசனும்.நம்ம ரெண்டு பேரும் நம்மோட அன்ப வெளிப்படுத்தி கிட்டதட்ட மூனு வருஷம் ஆகப்போகுது ஆனா நீங்க என் குடும்பத்த  பத்தி எதுவுமே கேட்டதில்லை ,நானும் உங்க கிட்ட பேசும் போது தான் சந்தோஷமா உணருவேன்  அதுனால அந்த மனநிலைய மாத்த முயற்ச்சி எடுக்கல.ஆனா இப்ப உங்க கிட்ட சொல்லனும் னு தோனுது."

மலரின் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.
குரு வின்.இந்த செயல் மலரிற்கு தன்னம்பிக்கை யும் தைரியமும் கொடுத்தது.தன் குடும்பத்தை பற்றி கூற தொடங்கினாள்.

"எங்க அப்பா பேரு ராமநாதன்.நாதன் குரூப் ஆப் கம்பனீஸோட சேர்மன்.சாதாரனமா தொடங்கி இப்ப இந்த அளவுக்கு அவரு உயர்திருக்காருனா அதுக்கு காரணம் அவரோட அயராத உழைப்பு மட்டும் இல்லை அடுத்தவங்கள எப்படி கவுக்களாம்,ஒருத்தர முன்னேற விடாம எப்படி தடுக்களாம் அப்படி னு யோசிக்கற நரி குணத்தாலயும் தான். அவரு வீட்டுக்கு வெளிய எப்படியோ ஆனா வீட்ல மருந்துக்கு கூட சிரிக்க மாட்டாங்க.

நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)حيث تعيش القصص. اكتشف الآن