"குரு.........."என்று அழைத்துக்கொண்டே கோகுல் அங்கு வந்தான்.கோகுல்,"டேய் குரு உன்னை எங்கெல்லாம் தேடுறது.நம்ம HOD கூப்பிடறாரு வாடா போலாம்."என்று அவனை அழைத்தான்.
தன் பெயர் சித்தார்த் என்று தான் கூறியிருக்க இவன் வந்த குரு என்று கூறிவிட்டானே என்ற எரிச்சலுடன்,"சொல்ல வேண்டியத சொல்லியாச்சுல,நீ கிளம்பு நான் வரேன்."
கோகுல் பேசியது மட்டும் தான் குருவிடம் ஆனால் பார்வை மலரிடமே இருந்தது.அதனால் தான் குரு அவனை அவ்விடமிருந்து அகற்ற எண்ணிணான்.
ஆனால் கோகுலோ குருவை தனியாக அழைத்துச்சென்று,"டேய் மச்சி யாருடா இந்த ப்யூட்டி.....,"என்று அவளை பார்த்து அசடு வழிய மென்குரலில் குருவிடம் கேட்டான்
"ம்ம் உன் தங்கச்சி பேரு மலர்."குரு.
"டேய் நான் எப்படா தங்கச்சின்னு சொன்னேன்."
"என் மனைவி உனக்கு தங்கச்சி தானடா?"
"டேய்..........நீயாடா இப்படி பேசுற?இதெல்லாம் எப்படா நடந்துச்சு நான் உன் கூடவேதானடா இருந்தேன்."
"அதெல்லாம் நான் அப்பறமா சொல்றேன் நீ முதல கிளம்பு." என்று அவனை அவ்விடத்திலிருந்து அனுப்பிவிட்டு மலரை நோக்கி வந்தான் குரு.
மலரின் நிலையோ மிகவும் மோசமாக இருந்தது.,"அறிவிருக்கா டி உனக்கு யாருனே தெரியாத ஒருத்தருகிட்ட இப்படி தான் உளறுவியா அதுவும் அவங்கள பத்தி அவங்ககிட்டயே சொல்லிருக்கியே உன்னெல்லாம்.உன்னை பத்தி என்ன நினைச்சிருப்பாங்க ஐய்யோ," என்று மனதிற்குள் புலம்பினாள்.
குருவிற்கு மலரின் நிலை நன்றாக புரிந்தது அதை பற்றி மேலும் பேசிஅவளை சங்கடப்படுத்த விரும்பாமல்,"ஹாய் மலர் என்ன ஆச்சு ஏன் அமைதியாயிட்ட?" என்று கேட்டான்.
"சாரி சீனியர்,நீங்க தான் குரு னு தெரியாம..."
"தெரியாம என்ன மலர் செஞ்ச ம்ம்..."என்று ஒரு புருவத்தை உயர்த்தி வினவினான்,
மலரின் முகம் அந்திவானமாய் சிவந்தது.குருவே தொடந்தான்," நான் உன்னை முதல்ல பாக்கல டா நான் சௌமியா வ ரொம்ப திட்டினதா ஃபீல்பண்ணேண் அதனால அவகிட்ட மன்னிப்பு கேட்க இங்க வந்தேன்." என்றவனை இடையிட்ட மலர், "நீங்க எதுக்காக அவகிட்டெல்லாம் மன்னிப்பு கேட்கனும் அதெல்லாம் தேவையில்லை தப்பு பண்ணது அவதான அத அவளுக்கே தெரியாத அளவு ஹான்டில் பண்ணிருக்கீங்க அவதான் உங்களுக்கு தாங்க்ஸ் சொல்லனும்."என்று பொறுமினாள்.
குருவோ "மலர் மலர் என்னை கொல்றடி இந்த அக்கறை தான் இதுவரைக்கும் எந்த பொண்ணுகிட்டையும் பேசாத என்னை மணிக்கணக்கா உங்கிட்ட நிற்க வெச்சிருக்கு ,நான் யாருனே தெரியாம எப்படி என் மேல இந்த அளவு பாசம் வெச்ச? சாரி கேட்க தான் வந்தேன் ஆனா யாரோ ரெண்டு பேரு வரவும் சரி அவங்க போனதுக்கு அப்பறமா பேசலாம் னு வெயிட் பண்ணேண்.
அப்பதான் நீ பேசுனதை கேட்டேன் ,என்னோட ஆரம்பத்தில இருந்து படிச்ச கோகுலே இன்னைய்கு யாருகூட சண்டை போட்டனு தான் கேட்டான்,ஆனா நீ என்னோட மனசில இருந்த ஆதங்கத்தை வெளிப்படுத்துன நான் பிரம்மிச்சு போய்டேன்.என்னை அறியாமலே என் மனசுக்குள்ள நீ வந்துட்ட".
"மலர்வதனி என்னோட வாழ்கையை வண்ணமயமாக்க என் பயனத்தில் என்னுடன் இனைபிரியாமல் இருப்பாயா"
மலர் செய்வதறியாமல் சிலையானால் யாருக்கும் அடங்காத காளை தன் முன் மண்டியிட்டு காதல் யாசகம் கேட்பதை எண்ணி கர்வம் கொண்ட மலரின் மனம் வேகமாக வந்து அவன் நெஞ்சில் தஞ்சம் கொண்டது.
மலர் குருவின் கரங்களில் இருந்தாள்.குருவோ உலகை வென்றுவிட்ட மகிழ்ச்சியில் மிதந்தான்.
YOU ARE READING
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
Romance#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.