Episode 10

6.9K 233 42
                                    

"மலர் வா போகலாம் க்ளாஸுக்கு லேட் ஆயிடுச்சு "அனிதா.

மலர்," நீங்க ரெண்டு பேரும் போங்க எனக்கு  கொஞ்ச நேரம் தனியா இருக்கனும் போல இருக்கு  நான் அப்பறமா வரேன்."தன் தோழியின் மனநிலையை உணர்ந்த அனிதாவும் அவளுக்கு தேவையான தனிமையை கொடுத்துவிட்டு சௌமியாவை கூட்டிக்கொண்டு வகுப்பு நோக்கி சென்றாள்.
அவர்கள் இருவரும்  அவ்விடத்தை விட்டு அகன்றதும் மலர் அமைதியாக அமர்ந்து தான் இதுவரை பார்திராத குரு பற்றி எண்ணிக் கொண்டிருந்தாள்.

மரத்திற்கு பின்பிருந்து வந்த குரு," ஹலோ மலர் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசலாமா."

"ம்ம் ஆனா நீங்க எதுக்கு என்கிட்ட பேசனும்,"என்று கூறி அந்த இடத்தை விட்டு எழுந்தாள்.

குரு," நான் உங்க சீனியர், நீங்க இப்போ உங்க ப்ரெண்ட்ஸ்கிட்ட பேசுனத நான் கேட்டேன்,அத பத்தி தான் உங்ககிட்ட பேசனும்."

மலர்(ஐய்யையோ போச்சு மலர்.நீ பாட்டுக்கு குரு வ டார்லிங் னு சொல்லிவச்சிருக்க,அந்த குரு வ பாத்தது கூட இல்லை . இந்த சீனியர் என்னெல்லாம் கேட்கப்போறாறோ.)

"சொல்லுங்க சீனியர்,நீங்க என்னை மரியாதையாலாம் கூப்பிட வேண்டாம் சும்மா வா போ னே கூப்புடுங்க."

"சரி மலர், குரு வ பத்தி உன்னோட ஆதங்கத்தை கேட்டேன்.அவன் கூட இருக்குரவங்களே அவனை புரிஞ்சுகாதப்ப நீ எப்படி அவன மாதிரியே யோசிக்கிற?"

("மலரு மாட்டுனடி நீ  கரெக்டா அத பத்தி கேக்குறான் பாரு,சமாளி,சமாளி.")

"என்ன சீனியர் நான் எப்படி குரு வ மாதிரி யோசிக்க முடியும்.இது குரு தான் என் கிட்ட சொன்னாங்க."

குரு(அடிப்பாவி அசால்டா பொய் சொல்றா பாரு இரு மாட்ன என்கிட்ட)

குரு,"உனக்கு குரு வ தெரியுமா?"

"ஓ தெரியுமே நாங்க ரெண்டு பேரும் நல்ல ப்ரெண்ட்ஸ்."

" அப்படியா? குரு என்கிட்ட உன்ன பத்தி சொல்லவே இல்லையே."

"என்ன சீனியர் நீங்க அதெல்லாமா உங்ககிட்ட சொல்லுவாங்க. நீங்களும் அவங்களும் ஒரே க்ளாஸ்தானா உங்க பேரு என்ன?"

மெல்ல புன்னகைத்த குரு ,"என் பேரு சித்தார்த்,உங்க முழுபெயருமே மலர் தானா?"

"என் பேரு மலர்வதனி சீனியர்."

"நல்ல பேரு,சரி உனக்கு எப்படி குரு தெரியும்."

"வந்த அன்னைக்கே எங்களை கொஞ்ச பேரு ராகிங் பண்ணாங்க,"

"என்ன? ராகிங்கா ? யாரு பண்ணா?உனக்கு அவங்க பேரு தெரியுமா?"

"கூல் கூல் ஏன் இவ்வளவு டென்ஷன்,ராகிங் பண்ண கூப்டாங்க ஆனா அதுக்குள்ள நம்ம ஹீரோ என்டறிய  பார்த்து பயந்து ஓடிட்டாங்க,அப்ப இருந்து எனக்கு குரு வ தெரியும்.
அப்பறம் தெனமும் ஏதாவது வீரதீர செயலை கேள்விபட்டுட்டு தான் இருக்கேன்."

"உனக்கு குரு வ நினைச்சு பயமா இல்லையா?"

" யாராவது தன்னப்பார்தே பயப்படுவாங்ஙளா ?நீங்க தப்பா எடுத்துக்காதீங்க சீனியர் எனக்கு குரு வோட கேரக்டர் ரொம்ப புடுச்சிருக்கு,அதனால எனக்கு அவரை தனித்து பார்க்க முடியல."

(என்ன பெண் இவள் ,தான் பார்திறாத ஒருவனை பற்றி யாரென்று அறியாத தன்னிடம் கூறுகிறாளே என்று நினைத்தான்.குரு அதுவே அவன் முகம் பிரதிபலித்தது.)
"என்னடா இவ நம்ம யாருனே தெரியாது நம்ம கிட்ட போய் சொல்றாளேனு பாக்குறீங்களா?
என் குரு வோட ப்ரெண்ட் தப்பானவங்களா இருக்க மாட்டாங்க. அது மட்டும் இல்லை குரு விஷயத்துல நான் ரொம்ப பலவீனமாயிடுறேன்,என்னையும் அறியாம என் மனசு வெளிப்பட்டுவிடுது."
(மலரின் நிலையை நினைத்து வருந்தினான் குரு, தான் இந்த அளவிற்கு காதலிக்கப்படுவேன் என நினைக்காத குரு சந்தோஷமாவே உணர்தான்.) 

"சரி மலர் இது என் நம்பர் உனக்கு எதாவது உதவி வேணும்னா என்கிட்ட தயங்காம கேளு "என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர முற்படுகையில் "குரு................ "என்ற குரல் கேட்டு இருவரும் வெவ்வேறு நிலையில் உறைந்து நின்றனர்.

நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)Where stories live. Discover now