Episode 6

8.3K 223 41
                                    

ஸ்டாஃப்ரூமிலிருந்து வேகமாக வெளியேரிய ரியா வை பார்த்த கௌதம் , "இவ எங்க இங்க வந்தா ?,சரி போய் கேப்போம்," என நினைத்து உள்ளே செல்ல நினைக்கையில் வதூ என்ற முகிலனின் குரல் அவனை நிறுத்தியது.

"அடப்பாவி வதூ... வா என்னடா நடக்குது இங்கே ,"என நினைத்து ஸ்டாஃப் ரூம்வாசலிலே நின்றான், உள்ளே நடந்த அத்தனை சம்பாஷனைகளையும் கேட்டவன் உள்ளே செல்லாமல் அமைதியாக கேன்டீன் சென்றான்.

கௌதம் மனது முகிலனை நினைத்து வருந்தியது ,தனது நண்பன் வாழ்வில் தனக்கு தெரியாத நிறைய பக்கங்கள் இருப்பதாய் அவன் நினைத்தான்.

கௌதமும் முகிலனும் சிறு வயது முதல் நெருங்கிய நண்பர்கள். இருவரும் தேர்தெடுத்தது ஒரே துறை என்பதால்  கல்லூரியிலும் அவர்கள் நட்பு தொடர்ந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக கௌதம் உடனே வேலையில் சேர முகிலனோ தனது மேற்படிப்பை தொடர்ந்தான். பள்ளி பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் முகிலன் மிகவும் கலகலப்பானவனாக வே இருந்தான். ஆனால் தற்போது அவனின் இந்த அமைதி வயதிற்கேற்ற முதிர்ச்சி என்றே கௌதம் இதுவரை நினைத்திருந்தான்.

மலர் மற்றும் முகிலனின் பேச்சை கேட்டவுடன் தன் உயிர் நண்பணிற்குள் வேறு ஏதோ காயங்கள் இருக்குமென எண்ணிணான்.

அவனின் வேதனையை போக்கி அவனை பழைய முகிலனாக மாற்ற வேண்டுமென எண்ணிக்கொண்டு அவ்விடம் விட்டு சென்றான்.

மலரின் முதல் வகுப்பு மிகவும் நன்றாக இருந்தது . மாணவர்களும் தன்னிடம் நன்றாக பழகியதால் எவ்வித சிரமமுமின்றி அவளாள் பாடம் எடுக்க முடிந்தது.

அன்று பொழுது இனிமையாகவே சென்றது அதற்கு பிறகு முகிலனை தனியாக சந்திக்க சந்தர்பம் கிடைக்காததால் சிறு தலையசைப்புடன் விடைபெற்று தனது வாகனத்தில்  வீடு வந்த சேரந்தாள்.

தனது அறைக்கு வந்து அன்றைய நிகழ்வுகளை நினைத்தவள் செவிகளில் விழுந்த அந்த பாடல் அவளை பின்னோக்கி அழைத்து சென்றது.

"ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா

நீயும் ஆனந்தபைரவி ராகமா

இதயம் அலைமேல் சருகானதே

ஒரு சந்தன பௌர்ணமியோரத்தில்

வந்து மோதிய இரும்பு மேகமே

தேகம் தேயும் நிலவானது

காற்று மழை சேர்ந்து வந்து

அடித்தாலும் கூட கற்சிலை போல

நெஞ்சு அசையாதது.

சுண்டு விரலால் தொட்டு இழுத்தாய்

ஏன் குடை சாய்தது காதல் சுகமானது.

ம்.....சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லாமல் தவிக்கிறேன். காதல் சுகமானது.

நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)Where stories live. Discover now