Episode 8

6.8K 224 20
                                    

கல்லூரி தொடங்கி ஆறுமாதங்கள் சென்றிருந்த நிலையில் ஒருநாள் வழக்கம்போல எல்லோரும் கல்லூரிக்கு வந்த வண்ணம் இருந்தனர். வேகமாக  வந்த ஒரு பைகில் வந்த  மாநிறத்திற்கு சற்று அதிகமான நிறத்துடன் , ஆண்மை நிறைந்த  தோற்றத்துடன காண்பவரை மதி மயங்க வைக்கும் மிடுக்குடன் கருப்பு நிற ஜீன்ஸ்  மற்றும் நீல நிற கார்கோ ஷெர்ட்  அணிந்திருந்து கம்பீரமாக உள்ளே நுழைந்தான் குரு.

அவன் உள்ளே நுழையும் போதே வழக்கம் போல் அவன் கண்கள் நாலாபக்கமும் துழாவியது.

அங்கே அவன் கண்ட காட்சி முஷ்டியை இருக செய்ய வேகமாக வண்டியை நிறுத்தி அங்கே விரைந்தான்.

குரு அங்கே அமர்திருந்து  இரு மாணவர்களை நோக்கி சென்றான்," டேய் மொபைல குடுடா."என்று அவர்கள் கைகளில் இருந்த மொபைலை கேட்டான்.

தயக்கத்துடன் குரு வை ஏறிட்ட அவர்கள் பின் கைகள் நடுங்க மொபைலை குரு விடம் ஒப்படைத்து விட்டு ஓட எத்தனிக்க  வேகமாக தடுத்து பளார் பளார் என அறைந்தான்,"இனிமே இந்த மாதிரி வேலை பண்றத பாத்தேன் பிண்ணிடுவேன் போங்கடா," என்று கர்ஜித்த குருவிடமிருந்து தலை தப்பியது என நினைத்து விட்டால் போதும் என அங்கிருந்து ஓடினர்.

நடப்பது எதையும் புரியாமல் எதிரில் நின்று முழித்துக்கொன்டிருந்த பெண்ணிடம் சென்ற குரு ," அறிவில்லை நம்மளை சுத்தி என்ன நடக்குதுனு கூட தெரியாமல் இருக்குறதா? மாடர்னா டிரெஸ் பண்றது தப்பில்லை ஆனா அது மத்தவக்களை பாதிக்கிறதா இருக்க கூடாது. உங்களை மாதிரி சில பெண்களாள தான் மத்த பெண்களுக்கும் கெட்ட பேரூ போங்க இனிமே கவனமா இருங்க."என பொரிந்து   தள்ளிவிட்டி அந்த இடம் விட்டு அகன்றான்.

அந்த பெண்ணிண் மனமோ ,"நான் இப்ப என்ன பண்ணே ,அவனா வந்தான் அந்த பசங்களை அடிச்சான்,என்னை திட்டுனான் ஆனா ஏன்னு தெரியலயே ?"
கண்ணில் இருந்து கண்ணீர் மளமள வென்று வந்து கொண்டிருந்தது வகுப்பறைக்கு  செல்ல பிடிக்காமல் ஒரு மர நிழலில் அமரந்தாள்.

அப்பெண்ணை திட்டிய குரு மிகவும் கோபமாக தன் நண்பன் கோகுல் அருகே சென்று அமர்ந்தான்.

"என்ன குரு ஆச்சு ஏன் இவ்வளவு கோபமா இருக்க இன்னைக்கு யாரு கூட சண்டை போட்ட?"

குரு," ஆமாடா நான்தான் போய் ஒவ்வொருத்தருக்கிட்டயா  சண்டை போடுறேன்,எனக்கு அப்படி ஒரு வேண்டுதல்."

"கோச்சுகாத மச்சி சரி சொல்லு என்ன பிரச்சனை."

அந்த பெண்ணை பற்றி கூற வேண்டாம் என நினைத்த குரு,"ம்...ஒன்னுமில்லை நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன்."என கூறி வகுப்பறையைவிட்டு வெளியேறினான்.

குரு இதுவரை பெண்களிடம் அதிகம் பேசியது இல்லை,இவன் குணத்திற்கு பெண்கள் இவன் அருகில் வருவதும் இல்லை, அப்படி இருக்க தான் அந்த பெண்ணை அதிகமாக திட்டிவிட்டோமோ? என மிகவும் கவலை யாக இருந்தது குருவிற்கு.சென்று அப்பெண்ணை பார்த்து விட்டு வரலாம் என நினைத்தவன் அப்பொழுதுதான் அப்பெண்ணின்  பெயரோ டிபார்ட்மென்டோ தெரியாத நிலையில் எங்கே சென்று அவளை தேடுவது என்று எண்ணிக் கொண்டிருக்கையில் அப்பெண் ஒரு மரத்திற்கு அருகே அமர்ந்திருந்ததை பார்த்து அங்கே விரைந்தான்.

நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)Where stories live. Discover now