அந்த வெள்ளை நிற லெக்சஸ் மிதமான வேகத்துடன் குருவின் பங்களாவில் நுழைந்தது.
அதிலிருந்து முதலில் கீழே இறங்கிய ஷியாம் அவன் கண்ட காட்சியில் உறைந்து நின்றான்.அவனை தொடர்ந்து இறங்கிய குருவும் மலரும் ஷியாமின் நிலைகண்டு புரியாமல் திகைத்தனர்.
அவர்களின் திகைப்பை கலைத்தது குருவின் அன்னையின் குரல்,"என்ன அங்கயே நின்னுடீங்க ? உள்ளே வாங்க உங்களுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கோம்." என்று கைகளில் ஆரத்தி தட்டுடன் அழைத்தார்.
தாங்கள் காண்பது கனவா இல்லை நனவா என்று புரியாமல் நின்றிருந்தவர்களின் கால்கள் நேராக சென்று வீட்டின் வாயிலை அடைந்தது.
அங்கே முகத்தில் மலர்ச்சியுடன் நின்றுகொண்டிருந்த தன் அன்னையை நம்ப முடியாமல் பார்தான் குரு, குருவின் பார்வையின் பொருளறிந்த அவன் அன்னை, "என்னடா இந்த அம்மா இவ்வளவு சந்தோஷமா வந்து ஆரத்தி எடுக்குறாங்களே னு பார்க்குறியா முகிலா?" என்று வினவினார்.
தன் அன்னையின் கவலை நிறைந்த குரலை கேட்ட குருவின் மனம் குழம்பியது, இருப்பினும் தன் குழப்பத்தை வெளிகாட்ட இது தக்க தருணமல்ல என்பதை புரிந்து கொண்ட குரு நொடியில் தன்னை மீட்டுக்கொண்டான்," என்ன மா இப்படி சொல்றீங்க ? உங்க எல்லாரோட சந்தோஷமும் எனக்கு ரொம்ப முக்கியம்.நாங்க ரொம்ப டயர்டா இருக்கோம் அதான் டல்லா தெரியுறேன்." என்று சோர்வுடன் கூறினான்.
மறுபேச்சு பேசாமல் வேகமாக ஆரத்தி எடுத்து இருவரையும் அன்புடன் உள்ளே அழைத்தார் ,உடன் வந்த ஷியாம் விடைபெற்று கிளம்ப அதனை மறுத்தவர் அவனை ஹாலில் அமர வைத்து மற்ற இருவரையும் உள்ளே அழைத்து சென்றார்.
வீட்டின் உள்ளே வந்த இருவரையும் நோக்கிய மஹாலெஷ்மி," என்னை மன்னிச்சிடு பா நான் ஏதோ கேட்பார் பேச்சை கேட்டு உங்க இரண்டுபேர்கிட்டையும் கொஞ்சம் கடுமையா நடந்துகிட்டேன். உங்க அப்பா வந்து தான் எனக்கு புரிய வச்சாங்க, "
அவரை இடைமறித்த மலர் ," அத்தை மன்னிப்பு அப்படீனு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க, இப்படி திடீர் னு கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்னா எல்லாருக்கும் தான் கோபம் வரும்.அதனால தப்பு எங்க மேலயும் தான் இருக்கு." என்று கூறிய மலரை பெருமையுடன் குருவும் பாசத்துடன் அவன் அன்னையும் நோக்கினர்.
YOU ARE READING
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
Romance#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.