Episode 22

6.6K 221 76
                                    

வேகமாக சென்றுகொண்டிருந்த வாகனங்களின் ஹாரன் ஒலி இருவரையும் நிகழ்வுக்கு அழைத்துக்கொண்டு வந்தது.

காரை இயக்க தொடங்கிய குரு,மலரை நோக்கினான்,மலரோ கண்ண சிவப்புடன் குரு வை பார்க்க தயங்கி கீழே குனிந்து அமர்ந்திருந்தாள். நிலை யை சகஜமாக்க விரும்பிய குரு, "ஏன் டா நான் என்னை பத்தின உன்மை யை உங்கிட்ட சொல்லை னு என் மேல கோபமா?" என்று கேட்டான்.

" அப்படிலாம் இல்லை பா ,எனக்கு பிடிச்சிருந்தது குரு அப்படீங்கிற பேரோ இல்லை கார்முகிலன்ங்கிற உங்க அடையாளமோ இல்லை.
எனக்கு உங்களோட துணிச்சல் பிடிச்சிருந்துச்சு, யாருக்கும் பயம்படாம தப்ப தட்டி கேட்ட உங்க வீரம் பிடிச்சிருந்துச்சு.மத்தபடி நீங்க எப்படி இருந்தாலும் அதை பத்தி நான் கவலை படலை."

மனதிற்கு நெருங்கிய பெண்ணிடம் பெறும் புகழ்ச்சி ஒருவனை எந்த அளவு மகிழ்வடைய செய்யும் என்பதனை குரு அந்த நொடி உணர்ந்தான்.அவன் எண்ணவோட்டத்தை தடை செய்தது மலரின் குரல் ,"இப்ப நம்ம எங்க போறோம்."

"ஹா ஹா ஹா இவ்வளவு சீக்கிரமா கேட்டுட்ட, நம்ம கெஸ்ட் ஹவுஸ் ஈ.சி.ஆர் ல இருக்கு அங்க தான் இப்ப போறோம்."

" அப்ப உங்க சொந்த ஊர் சென்னை  இல்லை யா?"

தான் இதுவரை தன்னை பற்றி மலரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று அப்பொழுது தான் தோன்றியது குரு விற்கு. ஒரு பெருமூச்சுடன் மலரை திரும்பி நோக்கிவிட்டு பின் தொடர்ந்தான்.

"வதூ நம்மளோட பூர்வீகம் எல்லாமே கோயம்புத்தூர் தான் அங்க தான் நான் பிறந்தது வளர்த்து எல்லாம் எங்க தாத்தா பேரு சந்திரசேகரன். அவரும் அப்பா மாதிரியே ரொம்ப நல்ல தொழிலதிபர்.

எங்க பாட்டி ருக்மனி அம்மாள் , தாத்தா விற்கு ஏத்த மனைவி ,இரண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டாங்க, இன்னும் காதலிச்சுக்கிட்டே இருக்காங்க."

" ஓ அந்த காலத்திலயே காதல் பண்ணாங்களா தாத்தா?"மலர்

" ம் ஆமா டா இரண்டு பேரோட ரொமான்ஸ் இன்னுங்கூட தாங்க முடியாது அவ்ளோ  லவ்ஸ் பண்ணுவாங்க, இவங்க இரண்டு பேரும் தான் என்னோட பெஸ்ட் ப்ரெண்ட் ."

நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)Where stories live. Discover now