குரு என்று அனைவராலும் மரியாதையுடனும் அன்புடனும் அழைக்கப்படும் கார்முகிலன் தனது மகன் என்று கம்பீரக் குரலில் ராஜகுமார பூபதி கூற அங்கிருந்த அனைவரும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்தனர்.
மலர் தனது காதல் கணவனை நோக்கினாள்
ஆறடி உயரத்தில் எதிரிகளை அடக்கி ஆளும் ஆண்மையுடன், அனைவரையும் தன் கண்ணசைவிலேயே கட்டுப்பட வைக்கும் கட்டளை பார்வையுடன் கம்பீரமாக நின்றிருந்த அந்த ஆணழகனை பார்த்து எப்போதும் போல் இப்போதும் கர்வம் கொண்டாள்.ராஜகுமார பூபதி மேலும் தொடர்ந்தார்," என்ன எல்லாரும் அப்படி பாக்குறீங்க ,என்னடா தன்னோட வாரிசு னு சொல்றாரே ஆனா பார்க்க சாதாரனமா இருக்காரே னா?
அது எங்க பரம்பரை வழக்கம்,எங்க வீட்டு வாரிச யாருக்கும் அறிமுகப்படுத்த மாட்டோம்,ஆடம்பரமா வளர்க்காம ரொம்ப சாதாரனமா தான் அவங்களை பழக்கப்படுத்துவோம். அவங்க மத்த பசங்க கூட சேர்ந்து தான் பழகுவாங்க, தனியா அவங்களுக்கான தற்காப்பு கலைகள் சொல்லித்தருவோம் ஆனா வழக்கமான படிப்ப அவங்க சாதாரன ஸ்கூல்ல போய் தான் படிக்கனும்.
அது மட்டும் இல்லை அவங்க படிக்கிற வரை அவங்களோட எல்லா செலவுகளும் நாங்க செய்வோம்.ஆனா அதுக்கு அப்பறமா வேலை தேடி அவங்களோட தேவைகளுக்கான செலவ அவங்க தான் சம்பாதிக்கனும்.
தனியா அவங்க யாருடைய உதவியும் இல்லாம இரண்டு வருஷம் சம்பாதுச்சதுக்கு அப்பறமா எங்களோட நிறுவனத்துடைய பொருப்புகள நாங்க அவங்க கிட்ட ஒப்படைப்போம்.
ஆனா என்னோட முகிலன் அவரோட ஸ்கூல் வரை தான் எங்கிட்ட பணம் வாங்கினார்.அதுக்கப்பறமா எல்லாமே அவரோட சம்பாத்தியம்தான்." என்று கூறுகையில் அவரின் முகத்தில் தன் மகன் என்ற பெருமை தாண்டவமாடியது.
மேலும் தொடர்ந்த அவர்,"இந்த மாதிரி கட்டுபாடு விதிகள் எல்லாம் நாங்க பரம்பரை பரம்பரையா கடை பிடிக்குறதுக்கு காரணம். நாளைக்கு எங்களோட தொழில நிர்வாகம் பண்றதுக்கு கடைசி நிலை தொழிலாளரோட கஷ்டம் வரைக்கும் தெரிஞ்சு இருக்கனும் அப்படீங்கிறதால தான்."
YOU ARE READING
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
Romance#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.