குருவை நிதானமாக நோக்கிய அவன் அன்னை," குரு நீ நாளைக்கு மலர நம்ம டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் செக் பண்ணிட்டு வர." என்று கூறி முடிக்கவும் தன் இருப்பிடத்தைவிட்டு ஆவேசமாக எழுந்த குரு குரலை உயர்தாமல் அதே நேரம் குரலில் கோபம் கொஞ்சமும் குறையாமல் தன் அன்னையை நோக்கி," இது வரைக்கும் நான் உங்களையோ அப்பாவையோ எதிர்த்து ஒரு வார்த்தை பேசினது இல்லை.அப்படி நான் வளர்க்கப்படலை.ஆனா இன்னைக்கு அப்படி ஒரு சூழ்நிலை உங்களால உருவாகிடுச்சு.நீங்க பேசினது எல்லாம் போதும் இதுக்கு மேல எதுவும் பேசாதீங்க." என்று குரலில் அடக்கப்பட்ட கோபம் தெரிய கூறினான்.
அவனை இடைமறித்த அவன் அன்னை," நான் சொன்னது ல என்ன தப்பு?உன் மனைவியை யாரோ 2 பேரு கடத்திகொண்டு போயிருந்தாங்க அப்படீ னு நம்ம சொந்தகாரங்களுக்கு தெரியவந்தா நம்மளோட கௌரவம் என்ன ஆகும். உங்க அப்பா தலை நிமிர்ந்து நடக்க முடியுமா?" என்று வினவினார்.
இப்பொழுது குரலை உயர்த்திய குரு," அம்மா.. ....... என்று கத்தினான் உங்க கண்ணுக்கு வெறும் ஸ்டேடஸ் மட்டும் தான் தெரியுதா?அவளோட மனசு புரியலையா? என் முன்னாடியே என் மனைவியை பற்றி இப்படி தப்பா பேசுறீங்களே , நான் இல்லாதப்ப என்னலாம் செய்வீங்க?.வாழைப்பழத்தில ஊசி ஏத்திர மாதிரி சர்வசாதாரணமா அவளோட சுயமரியாதைக்கு கலங்கம் சொல்லீட்டீங்க இதுக்கு மேல என் மனைவியை பத்தி ஒரு வார்த்தை நீங்க பேசுனீங்க.... நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்."
"இப்ப என்ன ஆச்சுனு நீ இப்படி கத்துற? உனக்கு வேணும் ணா உன் மனைவி உத்தமியா இருக்களாம்.ஆனா ஊர் உலகத்துல யாரும் நம்ப மாட்டாங்க.அவளை மருமகளா நான் ஏத்திக்கிட்டா என்ன யாரும் மதிக்கவும் மாட்டாங்க." என்று கோபத்துடன் கூறினார்.
" அம்மா............." இதுவரை குரு காத்துவந்த பொறுமை மொத்தமும் கரைய அந்த இரவு அதிர கோபத்துடன் கர்ஜித்தான் அவளின் காதல் கணவன்.
" டேய் சும்மா கத்தாத , உண்மை கசக்கத்தான் செய்யும் அதுக்காக பொய் சொல்ல முடியாது. நான் சொல்றதுல ஞாயம் இருக்கிறதால தான் உங்க அப்பா கூட அமைதியா நிக்கிறாங்க." என்று அமைதியாக தான் கூறியதற்கு மறுப்பு தெரிவிக்காத தன் கணவனை தன் புறம் மிக சாதுர்யமாக கொண்டுவர முயன்றார் மஹாலெஷ்மி.
YOU ARE READING
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
Romance#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.