மருத்துவர் கூறியதை கேட்ட விஷ் மிகுந்த யோசனையுடன் காணப்பட்டான்.ஏதோ தோண்றியதாய் "அம்மா நீங்க இங்கயே இருங்க நான் இப்ப வந்தர்ரேன்."
வேகமாக சென்ற விஷ்ஷை பின் தொடர்ந்து சென்றான் பிரபாகரன்.
"பிரபா நீ இங்க அம்மா கூட இரு நான் உடனே வந்துர்ரேன்." மிக சாதுர்யமாக அவனை விட்டுவிட்டு தான் மட்டும் வீட்டிற்கு சென்றான்.
வேகமாக மது அறையை ஆராய்ந்தவன் அவள் மொபைலை தேடி எடுத்தான்.அவன் மொபைலை கையில் எடுக்கவும் குருவிடமிருந்து கால் வந்தது,இதை எதிர்பார்தவன் போல கால் அடென்ட் செய்தான்.
"உனக்காக எவ்வளவு நேரம் செல்லம் வெயிட் பண்றது,காலேஜ் முடிய இன்னும் அரை மணி நேரம்தான் இருக்கு,டார்லிங் சீக்கரம் வந்துருடா.ஏன் அமைதியா இருக்க எதாவது பேசு."சுயநினைவு வந்த விஷ் "ஹலோ நான் மலரோட அண்ணா பேசுறேன் மலருக்கு உடம்பு சரியில்லை நீங்க கொஞ்சம் சீக்கரமா ....................ஹாஸ்பிடல் வாங்க. அடுத்த நொடி கால் கட் ஆனது.
விஷ் வேகமாக தனது காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனை வந்தடைந்தான்.அதிவேகமாக ஒரு பைக் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைவதையும் அதை ஸ்டான்ட் கூட போடாமல் கீழே போட்டு விட்டு ஓடு வந்த குருவையும் பார்த்த விஷ் மனது திருப்தி கொண்டது.
வேகமாக குருவை தடுத்த விஷ் ,"நீங்க?"
"நான் குரு மலர பார்க்க வந்திருக்கேன்.நீங்க மலரோட அண்ணா தானே,சொல்லுங்க என் மலருக்கு என்ன ஆச்சு?"
அமைதியாக குருவை ஆராய்ந்த விஷ் காலையில் நடந்த அனைத்தையும் தலை குனிவுடன் கூறினான்.
"நீங்கெல்லாம் மனுஷங்கதானா? உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கா இல்லையா,ஒரு பொண்ணு கிட்ட கேட்காம அவளோட கல்யாணம் வரைக்கும் பேசிமுடிச்சிருக்கீங்க.மலரோட மென்மையான மனசு இதை எப்படி ஏத்துக்கரும்னு கொஞ்சமாவது யோசிச்சீங்களா?என்னை என் மலர்கிட்ட கூட்டிட்டு போங்க என்னால என் மலர சுய நினைவுக்கு கொண்டுவர முடியும்.
ஆனால் இதுக்கு மேலயும் அவள நீங்க கஷ்டப்படுத்துணீங்க நான் சும்மா இருக்க மாட்டேன்.(எதையோ யோசித்தவனாக)இல்லை நான் இப்ப வரலை நான் போய்ட்டு அரைமணி நேரத்துல வரேன்.உங்க தங்கச்சி மேல உன்மையாவே பாசம் இருந்தா இந்த ஒரு தடவை நான் சொல்றத கேளுங்க ,நான் வந்தது யாருக்கும் தெரிய வேணாம் ப்ளீஸ் நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க." என்று கூறி வேகமாக சென்றான்.
குருவின் செய்கை விஷ்ஷிற்கு புரியவில்லை இருந்தாலும் அவன் குருவிற்காக அவன் கூறிய வார்தைகளுக்காக அங்கேயே காத்துக்கொண்டிருந்தான்.
சொன்ன நேர்த்திற்குள்ளாகவே குரு திரும்பி வந்திட குருவுடன் தன் தங்கையிருந்த தனி அறையை நோக்கி சென்றான் விஷ்.
பிரபாகரன் மனதிலோ "இந்த விஷ் எங்க போனான் என்னை ஏன் கூட கூட்டிட்டு போகல.அவனுக்கு மலரோட காதல் பத்தி தெரியாது னு தான் நினைக்கறேன்.அப்பறம் என்னாச்சு." இப்படி பலவாறு குழம்பிக்கொண்டிருந்தான்.
வேகமாக உள்ளே நுழைந்த விஷ்ஷை நோக்கிய பிரபாகரன் அவன் பின்னே வந்த குரு வை பார்த்து திகைந்தான்
YOU ARE READING
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
Romance#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.