மலரின் அருகே இருந்த அந்த இருவருக்கும் முத்துராஜின் வீட்டில் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர்களுடைய செல்பேசி மிக தெளிவாக ஒளிபரப்பியது.
முத்துராஜின் மூலமாக பலதடவை அவர்கள் குருவைப்பற்றி கேட்டிருந்தாலும் இன்று அவனுடைய ஆக்ரோஷமான கர்ஜனையில் அரண்டு போயிருந்தார்கள்.
முதலில் தெளிந்த முதலாமவன்," அண்ணே நம்ம இப்ப என்ன பண்றது?" என்று வினவினான்.
அதற்கு மற்றவன்," டேய் இப்பவே அரைமணி நேரமாச்சு இந்நேரத்துக்கு நம்ம முத்துராஜ் அய்யாவை அவனுங்க விசாரிச்சுட்டு இருப்பானுங்க ,அதுக்கு அப்பறம் நம்ம இருக்குர இடத்தை கண்டுபிடிச்சு இங்க வர எப்படியும் 2 மணி நேரமாவது ஆகும். நம்ம ஏன் கைல கிடைச்ச பூவை அனுபவிச்சுட்டு விட்டுட்டு போக கூடாது?" என்று அவன் கூறியது தான் தாமதம்," உனக்கு பூ தான மாப்பிள்ளை வேணும் ஒரு பூந்தோட்டத்தை யே உன் பாடைல வச்சு உன்னை வழியனுப்புறேன்." என்று பேசிக்கொண்டே சரமாரியாக அடிக்கத்துவங்கிய குரு வை புரியாத பார்வைபார்த்தான் அவன்.
அவனது பார்வையின் அர்த்தம் புரிந்த குரு," என்னடா இவன் வர எப்படியம் இரண்டு மணி நேரம் ஆகும் னு நினைச்சோமே அப்படி னு தான பார்கிற? சொல்றேன் கேழு உங்க இரண்டு வீட்டையும் முதல்லயே கண்டு பிடிச்சிச்சு ரவுன்ட் அப் பண்ணிட்டு தான் நான் அந்த முத்துராஜ அரெஸ்ட் பண்ண சொன்னேன்." என்றான் மிடுக்காக.
அந்த இருவரையும் போலீஸிடம் ஒப்படைத்துவிட்டு வேகமாக தன்னவளை தேடி உள்ளறைக்குள் சென்றான்.அங்கு பாதி மயங்கிய நிலையில் இருந்த மலரை கண்ட குருவின் மனம் வேதனையில் வாட கைகளோ அவளை கட்டுகளிலிருந்து வேகமாக விடுவித்தது. கண்களை திறக்க முடியாத நிலையிலும் குருவின் தொடுகையை அடையாளம் கண்ட மலர் நிம்மதியுடன் தன்னவனின் மீது மயங்கி சரிந்தாள்.
தன் மனைவியை தன் கைகளில் ஏந்திக்கொண்டு காரின் பின்னால் அவளை கிடத்தி அவளின் மயக்கத்தை தெளிய வைத்த குரு அவளை தன் கையனைப்பில் கொண்டுவந்து அவளிடம்," ஏன்டா இப்படி செஞ்ச? என் கிட்ட சொல்லாம ஏன் போன?" என்று வினவினான்.
YOU ARE READING
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)
Romance#1 in sentimental from 30 th may 2018 இது என் முதல் கதை. தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.என்னை திருத்திக்கொள்ள.அது உதவும்.