Episode 36

6.8K 238 103
                                    

காலையில் கல்லூரியில் ஏமாற்றத்துடன் ப்ரின்சிபாலின் ஆணைபடி வேறு கல்லூரிக்கு சென்ற கார்முகிலன் மாலை தனது அலுவல்களை முடித்துக்கொண்டு வீடு திரும்பினான்.

வீட்டிற்குள் நுழையவும் அவன் மொபையில் ரிங் ஆகவும் சரியாக இருந்தது. டிஸ்பிளேயிலிருந்த மலரின் அன்னையின் எண் ஐ பார்த்ததும் சிறு யோசனையுடனே பேச துவங்கினான்," ஹலோ அத்தை சொல்லுங்க, இந்த நேரத்தில கால் பண்ணிருக்கீங்க?" என்று குரலில் ஆச்சர்யத்துடன் வினவினான்.

" மாப்பிள்ளை சந்தோஷமான விஷயம் சொல்லத்தான் இப்ப கூப்பிட்டேன்."

" அப்படியா என்ன விஷயம் அத்தை , உங்களோட குரலே ரொம்ப உற்சாகமா இருக்கு."

" உங்க மலர் உங்களை பார்க்க இன்னைக்கு ஆசையா அலங்காரமெல்லாம் பண்ணிகிட்டு இன்னைக்கு காலேஜ் வந்தாள் ,"என்று தொடங்கி அன்று மாலை நடந்தது முழுதும் கூறி முடித்தார்."

" பாவம் அத்தை மலர் அவளை ஏன் நீங்க திட்டுனீங்க?" என்று வருத்தப்பட்டான் குரு.

" அட என்ன மாப்பிள்ளை நீங்க அவளோட தப்பை புரிய வச்சு அவ கணவனோட சேர்க்குற கடமை எனக்கு இருக்கு ல, அவ புரியாம இதெல்லாம் செய்ரா சொல்ல வேண்டிய விஷயத்தை சொல்ல வேண்டிய நேரத்தில சொன்னாதான் நல்லது." என்று தன் பக்க நியாயத்தை கூறினார்.

" அதனால மாப்பிள்ளை நீங்க கொஞ்சம் இங்க வந்தீங்கனா அவளோட மனசு முழுசும் மாறிடும்." என்று தான் கால் செய்த காரணத்தை தயக்கத்துடன் கூறினாள்.

" இதை சொல்ல ஏன் அத்தை தயங்குறீங்க , கிளம்பி வாடா அப்படீனு சொன்னா வரப்போறேன்." என்று அவன் வருவதை உறுதி செய்துவிட்டு கால் ஐ கட் செய்தான்.

மலரை பார்க்கப்போகும் ஆவலில் சில நிமிஷங்களிலேயே தயாராகி மலரின் இல்லத்திற்கு  சென்று காலிங்பெல் ஐ அழுத்தினான்.வெகு நேரமாகியும் யாரும் வந்து கதவு திறக்காததால்.மீண்டும் காலிங்பெலை அழுத்த முயல கதவு திறந்தது. திறந்த கதவின் உள்ளே நின்ற அந்த நபரைப்பார்த்து அதிர்ச்சியில்  உறைந்தான்.அவரை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவனின் அதிர்ந்த தோற்றத்திலே தெரிந்தது.

நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora