episode 2

11.1K 274 64
                                    

பீப் ......பீப் .........ஒளி கேட்டு  சோம்பலாக கண் விழித்தாள் மலர்வதனி. நேரம் 5.30 என காட்டியது . வேகமாக தன் படுக்கையை விட்டு எழுந்தவள்  குளித்துமுடித்து கிச்சனை நோக்கி விரைந்தாள்.காலை மதியம் இருவேளைக்கான உணவு தயாரிப்பை முடித்தவள் தனக்கு தேவையானவற்றை ஒரு சிறு டிபன் பாக்ஸில் எடுத்துக்கொண்டு தன் காலை உணவை உண்ண அந்த யாருமற்ற ஹாலில் அமர்ந்தாள். மலரின் எண்ணங்கள் சில வருடங்களுக்கு முன் பயணிக்க துவங்க அதை தடுக்க ஒரு நிமிடம் கண் மூடி யோசித்த மலர் பின்பு ஒரு பெருமூச்சுடன் வேகமாக சாப்பிட்டு எழவும் கதவை திறந்து கொண்டு மலரின் தாய் சாரதா வெளியே  வரவும் சரியாக இருந்தது.

ஒரு நிமிடம் நின்று தன் தாயை நோக்கியவள் பின்பு வேகமாக உள்ளே சென்று விட்டாள் . சாரதாவின் பார்வை ஏக்கத்துடன் தன்னை தொடர்வது தெரிந்தும் தனது மௌனதிறையை நீக்க மலரின் மனம் மறுத்து விட்டது.

" இன்னைக்கு  தான் வேலையில்  சேரணுமா  மலர் ?"என்று கேட்டுக்கொண்டே அடுக்களைக்குள் நுழைந்தார்  சாரதா.

மலர் சமையலை முடித்து மற்ற வேலையையும் முடித்து வைத்திருந்ததை பார்தவர் ,"என்னை எழுப்பி இருக்களாம்ல நான் சமைக்க மாட்டேனா ,"என  வேதனையுடன் கேட்க திரும்பி தன் வழக்கமான மௌன பார்வை பார்துவிட்டு தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.

தனது கேள்விக்கு பதில் வராது என்று தெரிந்தும் இந்த 2 வருடங்களாக அவர் கேள்வி கேட்பதை நிறுத்த வில்லை. பதில் சொல்லாமல் செல்லும் மகளை நினைத்து இன்றும் மனதிற்குள் அழுகிறார்.

ஹாலில் அமர்ந்த சாரதாவிற்கு 2 வருடங்களுக்கு முன்பிருந்த மலர் கண் முன் தோன்றினாள் .பட்டாம்பூச்சியாய் தன்னை சுற்றி  கவலைகள் இன்றி வாழ்ந்த மகள் இன்று தனக்குள்ளே வேலியிட்டு அதை விட்டு வெளி வர விரும்பாமல் வாழ்ந்து வருவது மிகவும் வேதனையாக இருந்தது.

எண்ண ஓட்டத்தை தடை செய்தது மலரின் வருகை இள நீல நிற சுடிதார் அவளது மஞ்சள் நிறத்திற்கு மிகவும் பாந்தமாக பொருந்த, தோள்வரை இருந்த முடியை போனி டையல் போட்டு சிறிதும் ஒப்பனை இன்றி தேவ லோக மங்கையென வந்த மகளை கண்ட தாயுள்ளம் என்றும்போல் இன்றும் பெருமை கொண்டது.

நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)Where stories live. Discover now