Episode 28

5.9K 213 63
                                    

                            
அந்த லைசென்ஸை வாங்கிக்கொண்ட  குரு அந்த மேனேஜரிடம்," நீங்க அந்த இன்னோவா கார் ல ஆக்சசரீஸ்( accessories)லாம் கொடுத்திருக்கீங்களா?"  என்று வினவினான்.

"ஆமா சார் நாங்க பொதுவா எல்லா காருக்கும் ஜி.பீ.எஸ்.கண்டிப்பா ஃபிட்  பண்ணிடுவோம் அது கஸ்டமருக்கு கூட தெரியாது , நாங்க வெளிப்படுத்துரதும் இல்லை,அது போக அவங்களோட தேவைக்கு ஏத்த மாதிரி  செய்து கொடுப்போம்." என்று விளக்கினார்.

ஷியாம் ," சரி சார் , நீங்க அந்த வண்டியோட ஜி.பி.எஸ் நப்பரை குடுங்க , இது பத்தி வெளியயார்கிட்டையும் சொல்ல வேணாம்." என்று கூறி அவ்விடம் விட்டு நகர்ந்தனர்.

வெளியே வந்த குரு தங்களுடைய கோயம்புத்தூர் ஆபிஸிற்கு கால் செய்து தன் தந்தையை காண தன் வந்த நபரின் பெயர் மற்றும் முகவரியை தனக்கு மெசேஜ் செய்யுமாறு கூறினான்.

ஷியாமோ  கன்ட்ரோல் ரூமை தொடர்பு கொண்டுமிற்கு அந்த ஜி.பி.எஸ் எண்ணை  உடனே டிராக் செய்ய சொல்லி உத்தரவிட்டு பின்பு  ஸ்டேஷனிற்கு கால் செய்து அங்குள்ளவர்களுக்கும் சில உத்தரவுகளை பிறப்பித்தான் "

இருவரும் வேகமாக அந்த புதிய முகவரியை நோக்கி பயணப்பட்டனர். தங்கள் வாகனத்தை மறைவாக நிறுத்திவிட்டு இருவரும் அந்த வீட்டை  நோக்கி சென்றனர்.

" நீ என்ன நினைக்கிற?" ஷியாம் கேட்ட கேள்வியால் தன் சிந்தனையை கலைத்த குரு," அப்பா வ ஒருத்தன் வந்து மீட் பண்ணிருக்கான் அவன் கொடுத்த அட்ரெஸ் நம்ம பழைய  முத்துராஜோடது. ஆனா அந்த பையனுக்கு பதிலா வேற ஒருத்தன் இருக்கான்.

அதே சமயம் காரை காணோம் னு சொன்ன முத்துராஜ் , அந்த கார் showroom ல குடுத்துருக்குறது வேற address ,வேற id.

அதனால எனக்கு என்ன தோனுதுனா , எல்லாமே ஏற்கனவே ஏற்பாடு செஞ்சிருக்காங்க,

அதாவது புதுசா கார் வாங்குனதுக்கு அப்பறம் அந்த கார் காணாம போச்சு னு சொல்லி பொய்யா கம்லெயின்ட்  முத்துராஜை வச்சு தப்பான அட்ரெஸ்ல  குடுத்துருக்காங்க.

நினைவிருக்கும் வரை( முடிவுற்றது)Where stories live. Discover now