காயத்ரி

1.4K 172 135
                                    

மேரியும் , நிசாவும் இரு கைகளும் கட்டப்பட்டு முழங்காலில் நின்று கொண்டிருக்க மித்ரன் துப்பாக்கியால் தன் தாடியை சொறிந்து கொண்டிருந்தான். அவன் கண்கள் பருந்து இரையை பார்ப்பது போல நிசாவையும் மேரியையும் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

"சார்.. சார் .. " என்று ஹோம் ஒர்க் செய்ய தவறிய மாணவன் டீச்சரை அழைப்பது போல அழைத்தாள் நிசா. மித்ரன் அவளை துளைப்பது போல பார்க்க, மௌனமானாள்.
அவன் பார்வை விலகியதும் மெல்லிய குரலில் மீண்டும் தொடர்ந்தாள்,

"நாங்க தான் எல்லா உண்மையும் சொல்லிட்டோமே.. எங்கள மன்னிச்சு விட்ருங்களேன் ப்ளீஸ் ..! மன்னிக்றது தான் மனிதனாக முதல் படினு பகவத் கீதைல சொல்லிருக்காங்க.."

"அப்போ நான் இன்னும் மனுசனாகலனு சொல்றியா..?" என்றான் மித்ரன் அவள் முகத்தையே பார்க்காமல்

"பைபிள் குர்ரான் லயும் அதே தான் சொல்லிருக்காங்க" மேரியும் வாயைத் திறந்தாள்.

"என்ன சொல்லிருக்காங்க .. நான் இன்னும் மனுசனாகலேனா..?"

"அய்யோ அப்படி சொல்லல சார் .. " மேரி மேலும் பேச முயற்சிக்க மித்ரன் அவளை நிறுத்த சொல்லி கையசைத்தான்.

மேரியின் குரலில் முன் கண்டிராத நடுக்கம் நிசாவை மேலும் பதைபதைக்க செய்தது.

தன் தலையை கோதிய வாறு மித்ரன் பேசத் தொடங்கினான்.
"நாயை தேடி வந்தியோ இல்ல வேற எத தேடி வந்தியோ.. அதெல்லாம் எனக்கு தெரியாது .. ஆனா.." அவன் பேசி முடிப்பதற்குள் அவன் செல் போன் சினுங்கி அவனை தடுத்தது, சலித்துக் கொண்டு அதனை காதில் செலுத்தி அங்கிருந்து நகன்றான்.

"ஹேய்.. உன்ட்ட மொபைல் இருக்குல்ல.." கிசுகிசுத்தாள் மேரி.
நிசா ஆம் என்பது போல தலையாட்ட மேலும் தொடர்ந்தாள் மேரி,
"உடனே போலீசுக்கு போன் பன்னு.."

"கை பின்னாடி கட்டிருக்கேக்கா அவங்கட்ட டீடைலா பேச முடியாதே.."

"அப்போ அந்த மாமி சனியனுக்காச்சும் போன் பண்ணு, அதுட்ட கொடுத்த ஒரு வேலையையும் ஒழுங்கா பண்ணாம இப்படி மாட்டி விட்ருச்சே..!"

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Where stories live. Discover now