கொல்லும்

1.4K 153 215
                                    

திசை எங்கும் இருள், ஜீப்பின் விளக்கு நீளும் தொலைவு வரையே அவன் பாதை. எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் நீண்டது பயணம். இந்நேரத்துக்கு நம் போட்டோ எல்லா ஸ்டேஷன்க்கும் போயிருக்கும், வழியில் இரண்டு செக் போஸ்ட்டை லாவகமாக கடந்து விட்டனர். குடிப்பதற்கு தண்ணி வாங்க குட காசு இல்லை ஆனால் வண்டிக்கு பெட்ரோல் கிடைத்து விடும். உலகமே மாறி போனது ஒரே இரவில். நிச்சயம் மாட்டி விடுவோம், எல்லாம் முடிந்தது, வண்டி எல்லையை தாண்டும் போது வாடகை காரின் ஓனருக்கு ஜிபிஎஸ் காட்டி கொடுத்து விடும் அதை பிடுங்கினாலும் அவன் கம்ப்ளைன்ட் கொடுத்து விடுவான். எல்லா வழியும் ப்ளாக், ரவியின் யுக நீள புலம்பல்களில் ஜெர்ரியின் காதுக்கு எட்டியவை இவை. பத்தை மாற்றும் ஏஜென்ட் இருப்பார்கள் சமாளித்து விடலாம் என்று சொன்ன பிறகே அமைதியானான். இப்போது தூங்கியும் போனான். ஜெர்ரிக்கு பொய் சொல்வதொன்றும் புதிதில்லை, ஆனால் இந்த பொய்யில் இருந்த வலி புதிது, ஏஜெண்டுகளின் வாசலில் நிற்கும் செல்வந்தர்களின் க்யு, பேங்க் வாசலை விட நீண்டது, போலீஸ் ஆன இவர்களை எப்படி அவன் நம்புவான். ரவியை போலவே தன்னாலும் அந்த பொய்யை நம்ப முடிந்தால் நன்றாக இருக்குமே என எண்ணினான். வாழ்கையில் முட்டாளுக்கு இருக்கும் நிம்மதி புத்திசாலிக்கு ஏனோ இருப்பதில்லை, தன் ஆதங்கத்தை ஆக்சிலேட்டரில் காட்ட வண்டி இருட்டில் விரைந்தது. அவனுக்கு இருப்பது ஒரே வழி தான், தன்னை தேடுபவர்கள் யாரும் பிடிக்க போவதில்லை , கொல்ல தான் போகிறார்கள் என்பது அவனுக்கு தெரியும், நுரை தவிர, அவள் காலில் சென்று விழலாம், பழைய காதலை கண்களில் காட்டி கெஞ்சலாம், அவளை ஜெர்ரிக்கு நன்று தெரியும். எப்படியும் இவனை என்கவுண்டரில் இருந்து காப்பாற்றி விடுவாள். ஆனால் சிறை செல்ல வேண்டும் கொசுக் கடியில் படுத்து, அச்சடித்த சோறுக்கு, புல்லை புடுங்க வேண்டும். அதற்காகவா இவ்வளவு கஷ்டமும், அவள் காலில் விழுந்து ஒரு வாழ்க்கையா அப்படி பட்ட வாழ்க்கை எதற்கு.. யார்ருக்காக.. நிச்சயம் தனக்கு அப்படி ஒரு வாழ்வு தேவை இல்லை, சட்டென முன்னால் சென்ற காரை ஓவர் டேக் அடிக்க முயன்றவன் முன்னே, மணல் லாரி எமனாய் வந்தது. பக்கத்தில் திருப்பினால் பிழைக்க முடியும், திருப்ப முயன்றான், கைகள் ஏனோ தாமதித்தன, ஆனால் எமன் தாமதிக்க வில்லை. டமார் என சத்தம், உடலெங்கும் உடையும் அவன் காரின் வலி ஊடுருவ, அடுத்த நொடி இருள் ஆனது, நிசப்தம் இருளை அலங்கரித்து. கண் விளித்து பார்த்தான். எல்லாம் தலை கீழாய் மாறி இருந்தது. இல்லை இவன் தலை கீழாய் தொங்கி கொண்டிருந்தான். கவ்விய சீட் பெல்ட் அவனை கை விட வில்லை , அதன் பிடியில் நகர முடியவில்லை, கஷ்டப் பட்டு தலையை திருப்பி பார்த்தான், ரவி இருந்த வண்டியின் பகுதியை லாரி கரம்பி விட்டு சென்றிருந்தது. தூக்கத்திலேயே போய் விட்டான், நல்ல சாவு. இவன் உயிர் இன்னும் ஒட்டியே இருந்தது, சில சிறுவர்கள் இவனை வட்டமிட்டனர். தங்களுக்குள் பேசிக் கொண்டு இவனை காப்பாற்ற முன்வர, பின்னாடியிருந்து ஒரு சத்தம், இங்க நெறைய பணம் இருக்குடா இந்தியில் கூவினான் ஒருவன், அடுத்த நொடி காப்பாற்ற முனைந்த சிறுவர் கூட்டம் பணத்தை மொய்க்க தொடங்கினர், ஒருவன் மட்டும் சில நொடி இவனை ஆழமாக பார்த்து விட்டு பின் கடைசி ஆளாய் பண மூட்டை பக்கம் சென்றான். அவர்கள் கிளறியதில் ஒரு பண கட்டு விலகி இவன் கண் முன் விழுந்தது. அதனை ஆழமாக பார்த்தான். ஏன் நாம் இதன் பின்னே ஓடினோம்.. எதற்காக இத்தனையும் செய்தோம் என அவனுக்கு தோன்றியது.  இந்த பணம்,  இதே  பணம் தான், நம் குடும்பத்துடன் ஒட்டி உரசி விட்டு, தேடிய தருணத்தில் கை விட்டு ஓடிப் போனது. இதே பணம் தான்,  தாயை தந்தைக்கு துரோகம் செய்ய வைத்தது, தகப்பனை தூக்கு கயிற்றில் ஊசலாட வைத்தது, நாம் விரும்பியவர்களையே நம்மை வெறுக்க வைத்தது, பணத்தை வெறுக்க வேண்டிய தன்னையே,  விரும்ப வைத்தது. தான் செய்த இத்தனையும் இதற்காக தான்.  இப்போது தன் முன்னே கேட்பாரற்று கிடக்கிறது, தான் எட்டும் தொலைவில் , எட்டா நிலையில், இன்னும் வசீகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. பழசாயினும், அழுக்காயினும் செல்ல காசாயினும் கவர்ச்சி ஏனோ குறைவதில்லை இதற்கு.

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ