நூர்

1K 135 102
                                    

புதியவளின் துப்பாக்கியின் டரிகரை இறுக்கமாக பற்றியிருக்க.. மொபைல் ஒளி சிறிது சிறிதாக அவளை நெருங்கி கொண்டிருந்தது, அவள் சுடத் தயாரான அந்த வேளை,
"மேடம் , நான் கணேஷ் சுட்றாதீங்க, நாங்க வர்றத பாத்து அவனுங்க எஸ்கேப் ஆயிட்டானுங்க..",

பெருமூச்சு விட்டபடி தன் துப்பாக்கியை மீண்டும் பிறந்த வீட்டிற்கு அனுப்பினாள்.
காரில் ஒழிந்து கொண்டிருந்தவர்களுக்கு என்ன நேர்ந்ததென்று தெரியவில்லை,
"நீங்க வெளிய வரலாம், எவரிதிங்க் இஸ் பைன்.." என்று புதியவளின் குரல் கேட்டதும் மெல்ல மூவரும் ஒன்றன் பின் ஒன்றனாக வெளிவந்தனர். சற்று தொலைவில் புதியவள் மூவருடன் பேசிக் கொண்டிருந்தாள். இருட்டில் அவர்கள் அணிந்திருந்த வெள்ளை சட்டை மட்டுமே தெரிந்தது.
சில நிமிடங்களுக்கு பிறகு புதியவள் அவர்களிடம் மறுபடியும் வந்தாள். சில நிமிடங்களுக்கு முன்னால் இக்காலத்து மாடர்ன் இளசுகள் போல காட்சியளித்தவள், இப்போது ஆங்கில பட ஹீரோயின் போல மாறியிருந்தாள். இவர்கள் கிண்டலடித்த கிராப்பில் இப்போது கிரண் பேடி தெரிந்தார்.
"ஹலோ .. சாரி.. உங்க கார மோசமா ட்ரைவ் பண்ணிட்டேன்" என்றாள் நிசாவை பார்த்து,
"பரவால்ல.. பரவால்ல.." வேகமாக பதிலளித்தாள் காயத்ரி. 'அத நான் சொல்லனும்' மனதில் நினைத்துக் கொண்டாள், ஓடும் ஆனா ஓடாது என்ற நிலையிலிருந்த தன் காரை பார்த்தவாறு.

"நான் நூர்.."

"ஓ.. நூறா.. நான் தான் உங்களுக்கு கால் பண்ணேன். லேட்டானாலும் கரெக்டா வந்துட்டீங்களே" என்றாள் காயத்ரி முந்திரி கொட்டையாக.

"என் பேரு நூர் ஜகான்னு சொன்னேங்க " என்றாள் சிறிய புன்னகையுடன்.
காயத்ரி கண்களில் சாரியுடன் அசட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

"நான் ஒரு சிபிஐ ஆபிசர் .. இவங்க கணேஷ் ரகு செல்வம் என்னோட பிரெண்ட்ஸ்.." தன் பின் நின்று  கொண்டிருந்தவர்களை அறிமுகப் படுத்தினாள்.

"பரண்ட்ஸ்னு சொல்றத விட மேடம் எங்களுக்குலாம் ரோல் மாடல் மாதிரி, துணிச்சலுக்கு ஜென்டர் இல்லேனு காட்னவங்க.." என்று மூவரில் ஒருவர் பெருமிதத்துடன் சொல்ல , அவரை புன்னகையால் நிறுத்திவிட்டு நூர் தொடர்ந்தாள்,
"என் வேலைல இந்த மாதிரி டேஞ்சர் நடக்குறது தான். பட் இந்த தடவை ஆபத்து என்ன தேடி வரல.. உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன்."

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Where stories live. Discover now