துப்பாக்கி

1.2K 153 134
                                    

காயத்ரிக்கு தலை சுற்றுவது இன்னும் நின்ற பாடில்லை. எல்லாம் சரியாக தானே செய்தோம் , திடீரென எங்கிருந்து இந்த புது ஆள் வந்தான் என யோசித்தாள். தான் ஏதோ பெரிய தவறு செய்து விட்டோம் என்பது மட்டும் , பச்சை மிளகாயை கடித்தது போல உறைத்தது. தன்னை கத்தரி வெயிலாய் சுட்டுக் கொண்டிருந்த மேரியையும் நிசாவையும் அவள் ஏறிட்டுப் பார்க்கவும் துணியவில்லை. அவர்கள் கட்டை விடுவித்தாலாவது தன்னை சினப் பார்வையிலிருந்து விடுவிப்பார்களா என ஏங்கியவளாய் அவர்களை நெருங்கி சென்றாள்.
ஏதும் பேசினாள் கடித்து விடுவார்களோ என்ற பயத்தில் மௌனமாக அவர்களின் கட்டை அவிழ்க்கத் தொடங்கினாள்.

"இப்படி சொதப்பிட்டீங்களே மாமி.." முதலில் வாய் திறந்தாள் நிசா.

"நான் என்ன தெரிஞ்சேவா பண்ணுணேன் , நேக்கு அது யாருன்னே தெரியாது , உங்கள காப்பாத்தனும்னு ஒரு வேகத்துல பண்ணிணுட்டேன், அதுக்கு என்ன இப்படி மொறைக்றேளே " கண்களை தன் முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.

"சரி சரி சென்டி போதும் .. என்னையும் அவுத்து விடுங்க " மேரி முகத்தை மாற்றாமல் உக்கிரமாகவே சொன்னாள்.

"ஆனா ஒன்னு நோட் பண்ணியோ இந்த ஆளு அசப்புல அந்த சண்டாளன் மாதிரியே இருக்கான், ஒரு வேளை அண்ணனா இருக்குமோ" கட்டை அவிழ்த்தவாறே காயத்ரி ஒரு பிட்டை போட,

"உங்க தப்ப மறைக்க சமாளிக்காதீங்க மாமி.. அவர் யார் தெரியும்ல .. பெரிய சி.ஐ.டி ஆபிசர் "

மேரியின் சொன்ன அந்த சொற்கள் காயத்ரியின் காதுக்குள் நுழைந்து எறும்பை போல் குடைந்தது.

"பெருமாளே..!! என் வாழ்க்கைல நான் ஒரு கரப்பான் பூச்சிய கூட அடிச்சதில்லயே.. முதல் முதலா ஒருத்தர அடிச்சேன்.. என் நேரம்... அதுவும் போலீஸ் காரனா போச்சே, நான் என்ன செய்வேன்" காயத்ரி படபடத்திக் கொண்டு வாய் விட்டு குமுறினாள்.

"சும்மா பொய் சொல்லாதீங்க மாமி , போன வாரம் நீங்க மாமாவ குமுறுனத உங்க பையன் எங்க வீட்ல  லைவ் டெலிகாஸ்டே பண்ணிட்டான்"

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Where stories live. Discover now