அந்த அறையில் எல்லாம் தலை கீழாய் மாறியிருந்தது. பல திருப்பங்களுடன் அந்த இரவு யுகம் போல நீண்டு கொண்டிருந்தது.
மேரியின் பிடி துப்பாக்கியின் மேல் இறுகியிருந்தது, இந்த நிமிடம், இந்த அறையில் அவள் தான் ராணி , அவள் நினைத்தது நடக்கும். மித்ரன் ஏதோ பேச முயல அவனுக்கு வாயப்பளிக்காமல்,
"முட்டி போடு .." என மறுபடியும் சொன்னாள் இம்முறை சற்று அழுத்தமாக.மித்ரன் இன்னும் நகரவில்லை , அவன் அச்சத்தை தன் தோரணையால் சமாளித்திருந்தான். மேரி பொறுமை இழந்திருந்தாள்,
"முட்டி போடுனு சொல்றேன்லடா.." அவள் அதட்டல் பக்கத்திலிருந்த காயத்ரின் காதை துளைக்க, துப்பாக்கியை வான் நோக்கி காட்டி சுட, நிசாவும் காயத்ரியும் கண்களை இறுக மூடிக் கொண்டனர்.
டமால் என சத்தம் வரும் என்று எதிர்பார்த்த காதுகளுக்கு டிக் என்ற முனகலே கேட்டது. மேரி மலங்க மலங்க விழிக்க,
"என்னடி துப்பாக்கி சைலன்ட் மோட்ல இருக்கா.." காயத்ரி நடப்பது தெரியாமல் கேட்க,"துப்பாக்கி சுடலக்கா.." மேரி கிசு கிசுத்தாள் பரிதாபமாக,
"கன் லாக் ஆயிருக்கு.." இப்போது கர்வம் மித்ரனின் குரலில் தெரிய , சன்னலிலிருந்து காற்றும் அவன் பக்கம் அடித்தது."ஆஆ.. இது என்னாடி பொல்லாத லாக்கு, துப்பாக்கி சுடும்னுன்னா கேள்வி பட்ருக்கோம் , இதென்ன மாயத் துப்பாக்கியோ" அலுத்துக் கொண்டாள் காயத்ரி.
"அது என் கைல தான் சுடும் .. மை டியர் மாமி"
"அதான் இப்போ உன் கைல இல்லியே.." சிமிட்டினாள் நிசா சிறு குழந்தையாக.
"இப்ப வரும் பாரு.." மித்ரன் தன் பையிலிருந்து எதையோ எடுத்து அதை அமுக்க , அதனுள்ளிருந்து ஒரு கத்தி எட்டி பார்த்தது.
"இதோ.. பாருடா அம்பி .., என்னதானாலும் உன்னான்ட இருக்கறது வெறும் கத்தி, நாங்க துப்பாக்கி வச்ருக்கோம், கத்தி பெருசா..? துப்பாக்கி பெருசா.. சமத்தா கத்திய கீழே போட்ரு .. உன்ன மன்னிச்சு விட்டுடறோம்.."
أنت تقرأ
டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)
فكاهةமூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.