நிசா கொண்டு வந்த டூப்ளிகேட் சாவி, ஒரிஜினலுக்கு நிகராக வேலை செய்ய, அந்த பிளாட் கதவு கொட்டாவி விட்டது போல திறந்தது . இருவரும் உள்ளே நுழைய, மறுபடியும் அடைத்துக் கொண்டது.
" நான் இந்த ரூம்ல செக் பண்றேன், நீ அங்க போய் பாரு .. ஓகே தானே..? " என்றாள் மேரி."ஓகே தான்ன்... இந்த குளோஸ் தான் வொய்ட்ல வாங்கிட்டீங்க.." நிசா தன் கை குளோசை பார்த்தவாறு சொன்னாள்.
"ஏன், வொய்ட்க்கு என்ன..?"
"வொய்ட் அழுக்காயிரும்ல, ரெட் னா நல்லாயிருக்கும்.."
மேரியின் கண்கள், பத்திரிக்கையாளர்களை பார்த்த விஜயகாந்த் போல கோபத்தில் சிவக்க, அதனை புரிந்தவளாய் நிசா அங்கிருந்து நழுவினாள்.
நிசா அந்த பெரிய அறையில் நுழைந்து , தன் இனிய குரலில் "டாமி...! டா.....மிமி.....! டா.............மி..!" காதலனை தேடும் காதலி போல அழைத்தாள், இல்லை பாடினாள் .
அவள் செல்ல நாய் வரும் ஓசை கேட்க, அவள் உடலெல்லாம் உற்சாகத்தில் புல்லரித்தது. நீண்ட நாள் பிறிவுக்கு பிறகு, தன் செல்ல டாமியை தொட்டுத் தழுவ கைகள் துடித்தன, தன் இரு கைகளையும் நீட்டி கட்டியணைக்க தயாராக நின்றாள்.
ஆனால் வந்தது என்னவோ டாமியல்ல , ஆளுயரத்தில் ஒரு டாபர்மேன் நாய், கரிய முகத்துடனும் கூரிய பற்களும் , எச்சில் சொட்டும் நீண்ட நாக்குடனும் , மர்ம படங்களில் வரும் வில்லனின் நாய் போலவே இருந்தது அது.நிசா மனதிற்குள் மரண ஓலமிட்டாலும் "அக்கா...! அக்கா.. ப்ளீஸ் ஹெல்ப் " என்று கிசுகிசுக்கும் ஓசையில் தான் அழைத்தாள் மேரியை.
'இப்போ எது சரியில்லைனு நொட்டை சொல்ல போறாளோ' என்று நினைத்துக் கொண்டே அவளிடம் சென்றாள். அங்கே நிசா உறைந்து போய் நிற்பதையும் , அவள் உறைய காரணமான டாபர்மேன் அவள் குரல்வளையை குறி பார்த்து பாய தயாராக நிற்பதையும் கண்டு அதிர்ந்தாள்.
"கொஞ்சம் கூட அசையாத.., அப்படியே இரு" என்றாள் மேரி நிலவரம் கண்டு சுதாரித்தவளாய்.
"என்னக்கா .. ஜுராஸிக் பார்க் படத்துல வர்ர டயலாக்லாம் சொல்றீங்க.."
ESTÁS LEYENDO
டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)
Humorமூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.