டிசம்பர் மாத குளிர் காற்று கே.ஜி.அப்பார்ட்மெண்ட்டை லேசாக வருடிய போது மணி இரவு பத்து. கே.ஜி.அப்பார்ட்மெண்ட் ஆதம்பாக்கத்தில் ஒதுக்கு புறமாக அமைந்திருக்கும் ஒரு சுமாரான சைஸ் அப்பார்ட்மெண்ட், பத்து பதினைந்து வீடுகள் வரை இருக்கலாம்.பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தினரே வசிக்கின்றனர், நகரத்தின் போதைக்கும் நம் முன்னோர்களின் போதனைகளுக்கும் நடுவில் சிக்கி தவிக்கும் மக்கள் வசிக்கும் இடம்.
அதன் முதல் மாடியில் மேரி கிசுகிசுக்கும் ஓசை கேட்டருகில் உறங்கிக் கொண்டிருக்கும் வாட்ச்மேனின் தூக்கத்தை கலைக்க முயன்று தோற்றுப்போனது."டூப்ளிகேட் கீ, மாஸ்க் , கை குளோஸ் எல்லாம் ரெடி" மேரி அவள் ஹேன்ட் பேக்கை செக் பண்ணி முடித்தாள்.
"குளோஸா...!!, அது எதுக்குடி.." என்றாள் காயத்ரி.
"கைரேகை தெரியாம இருக்கத்தான் மாமி" சிமிட்டினாள் நிசா.
"என்னடி.. கொலை பண்ண போறாப்ள பில்டப் கொடுக்றேள்"
"மாமி எதுனாலும் நடக்லாம், டாமிக்காக நான் கொல கூட செய்வேன்" என்றாள் மேரி இறுகிய குரலில்.
"நம்ம ஆத்துக்காராள்ளாம் வர வரைக்கும் வெய்ட் பண்லாமேடி..! ஏன் அவசரப்பட்றேள்.."
"வந்துட்டா மட்டும் .. அதுங்கள்லாம் ஹோட்டல்ல எக்ஸ்ட்ரா சட்ணி கேக்கவே பயப்படுங்க.. அதுலயும் இப்போ டூர் வேற போயிருக்குதுங்க , அவங்கல்லாம் திருப்பி வரதுக்குள்ள டாமி கதையே முடிஞ்சுரும்" சலித்துக்கொண்டாள் நிசா.
"பர்ஸ்ட்டு.. அந்த தாடிக்காரன் தான் டாமிய கடத்திருக்கான்னு எப்படி சொல்றேள் , நேக்கென்னவோ பெரிய ப்ராப்ளமாக போறதுன்னு தோன்றது"
"மாமி.. நீங்களும்தானே அவன் ரூம்லருந்து டாமி குரல் வர்றத கேட்டீங்க"
"டாமி குரல் என்ன ஏசுதாஸ் குரலாடி, எல்லா நாய்க்கும் ஒரே லொள் லொள் தானே"
"டாமிய நாய்னு சொல்றீங்களா" நிசா கண்கள் சிவந்தன "உங்கள அவன் கடத்தி வீட்ல வச்சிருந்நான்னா டாமி உங்கள மாதிரிதான் சும்மா இருக்கும்னு நினைக்குறீங்களா..!"
VOCÊ ESTÁ LENDO
டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)
Humorமூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.