காயத்ரி அழுது கொண்டே சாப்பிட்டாள் , பாவம் அவள் என்ன செய்வாள் . அவளுக்கு தெரிந்த உண்மையெல்லாம் சொல்லி விட்டால் ஆனால் அதை நம்ப யாரும் தயாராக இல்லை. அவர்கள் நம்பும் அளவுக்கு பொய் சொல்லவும் இவளுக்கு தெரியவில்லை. . ஜெர்ரி இவளையே குறு குறுவென பார்த்து கொண்டிருந்தான் . இவள் சாப்பிட்டு முடித்ததும் விசாரணை தொடங்கி விடும். ஒரு பொங்கலை எவ்வளவு நேரம் தான் சாப்பிடுவது. அந்த பெருமாள் தான் தன்னை காக்க வேண்டும் என மனதிற்குள் எண்ணி கொண்டாள். அவள் வேண்டுதல் கேட்டு விட்டதோ என்னவோ. ஜெர்ரியின் போன் ஒலித்தது.
" யா .. சொல்லு "" வாட் ! இத நான் எப்படி நம்புறது .." சில நொடி மௌனத்தில் , அவன் கவனம் போனில் குவிந்து இருக்க, அவன் கேட்ட ஏதோ ஒன்று அவன் முகத்தின் சிரிப்பை துடைத்து எடுத்தது .
" ஓகே ஓகே நன் காயத்ரியை விட்டுடறேன் .. எனக்கு அவன் வேணும் .. டீல் .."போனை வைத்த போது அவன் முகம் கொஞ்சம் வெளிறி போனது,
" யாரு சார் போன்ல " நாராயணன் குழம்பி போய் கேட்க,
" நூர் மித்ரன் தம்பிய தூக்கிட்டா .. ரவியை அங்க புடுங்குனது போதும் இங்க வர சொல்லு.." தன் தலையை கோதி விட்ட வாறு அறையை விட்டு வெளியேறினான். காயத்ரி வாயில் இருந்த கடைசி பொங்கலை நிம்மதியாக முழுங்கினாள்.
*****************
நூர் முகத்தில் மீண்டும் இழந்த பொலிவு மிளிர , உற்சாகமானாள் . நிஷாவுக்கு மகிழ்ச்சி இருந்தாலும் மேரியை இன்னும் காணாதது கவலை அளித்தது . செல்வாவை கணேஷுடன் அனுப்பி விட்டு மேரிக்காகவே இருவரும் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் மேரி தூரத்தில் வருவது தெரிந்தது. மேரிக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற நிம்மதியுடன் நூர் நிஷாவை பார்க்க , அவளோ சந்தோஷத்தில் துள்ளி குதித்து விட்டு "டாமிமிமிமி ......" என கத்திக் கொண்டே அவளை நோக்கி ஓடினாள் அப்போது தான் மேரி கையில் வைத்திருந்த நாயை நூர் கவனித்தால். இதான் டாமியோ .. இதை தான் மித்ரன் பத்திரமாக பார்க்க சொல்லி அவன் தம்பியிடம் கொடுத்திருக்கிறான். இதில் எதோ ரகசியம் இருக்கிறது என மனதில் எண்ணியவளாய் நூர் மேரியிடம் சென்றாள் அவள்.
ESTÁS LEYENDO
டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)
Humorமூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.