விடியல்

1.1K 131 80
                                    

   இருளில் மின்மினி பூச்சியாய் சுமோவின் ஹெட்லைட் உறுமலுடன் மின்னி மின்னி அணைய, நிசா விடாப் பிடியாக அதை ஸ்டார்ட் செய்ய முயன்று கொண்டிருந்தாள்.
"என்ஜின் போய்டுச்சோ..!" மேரி நிசாவை பரிதாபமாக பார்த்தாள்.
அவள் பரிதாபத்துக்கு பதிலளிக்காமல் சுமோவுக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் இருந்தாள் நிசா. நூர் இதை கவனித்தவளாய் அவளை அணுகி,
"நான் பாக்குறேன் , டோன்ட் ஒரி.." என்றவாறு வண்டியின் முன் மண்டையை திறந்து என்ஜினை சீண்டி பார்த்தாள், சில நேர நோண்டலுக்கு பிறகு ,
" ரேடியேட்டர் ஹீட்டாயிருக்கு.. தண்ணி இருக்குமா..?" என்றாள் நிசாவை பார்த்தபடி, "பின்னாடி கொஞ்சம் பார்த்தேனு நினைக்றேன் , இருங்கோ எடுத்துன்டு வரேன்.." காயத்ரி மின்னலாய் சுமோவின் பின் வாயில் தன்னை நுழைத்துக் கொண்டாள்.
"இங்கே பாத்தியாடி நிசா .. அந்த கடன்காரன் என்ன வேலை பாத்துருக்கான்னு .." அவள் குரல் உரலாக இடிக்க, அவளை நோக்கி சென்றாள் நூர், அங்கே பின் சீட்டின் சில கீரல்களை சுட்டி காட்டியவாறு நின்று கொண்டிருந்தாள் காயத்ரி, அந்த கீரல்களை சற்று உற்று நோக்கிய போது மித்ரனின் கடைசி அஸ்திரத்தின் அறிகுறிகள் தென்பட்டன.
"கணேஷ் ஒரு பேப்பரும் பென்னும் கொண்டு வாங்களேன்" நூர் தன் கவனத்தை இன்னும் சீட்டின் கீரல்களுக்கள்ளே தான் வைத்திருந்தாள். கணேசிடன் வாங்கிய பேப்பரை கீரலின் மீது வைத்து பேனாவால் சொறிந்து கொடுக்க, மித்ரனின் மெசேஜ் பேப்பருக்கு இடம் மாறியது. அதற்குள் அனைவரும் கூடி விட, பேப்பரை தூக்கி காட்டினாள் நூர்,

"ஏதோ நம்பர் மாதிரின்னா இருக்கு .." காயத்ரி

"மேலோட்டமா பாக்க அப்படி தான் இருக்கும், கொஞ்சம் டீப்பா பாருங்க, அதெல்லாம் லெட்டர்ஸ் , BROTHI வரைக்கும் எழுதியிருக்கான், அதுக்குள்ள அவனுக்கு ஏதோ தடங்கல் வந்திருக்கனும், " நூர் சொல்லி முடிக்கவும் மேரியும் நிசாவும் காயத்ரியை பார்த்தனர், அதனை பார்க்காத்து போல காயத்ரி , "BROTHI னா என்னவா இருக்கும்..?" என்றாள்.

"பிரதர்னு இருக்கலாம்.." நிசா வழக்கம் போல முந்திக் கொண்டாள்.

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Where stories live. Discover now