அமைதி

1.3K 150 113
                                    

ஊரே உறங்கிக் கொண்டிருந்த அந்த அமைதியான இரவில், மித்ரனின் அறையில் மட்டும் நிலவியது ஒரு போலியான அமைதி. பேரலையாக கொந்தளிக்க தயாராகும் ஆழ்கடலின் அமைதி. நிசாவும் மேரியும் மனதிற்குள் பயத்தையும் கண்களில் நீரையும் அடக்கிக் கொண்டு தங்கள் கடைசி தருணம் எதுவென எதிர்பார்த்து இருந்தனர்.

மித்ரன் சிந்தனையில் , தன் அடர்ந்த தாடி மயிரை கையால் நெளித்து வளைத்து சித்ரவதை செய்து கொண்டிருந்தான், அவனது நீண்ட புருவங்கள் சண்டையிடும் ஆட்டுக் கிடாவை போல ஒன்றையொன்று முட்டிக் கொண்டிருந்தன. நிசாவின் பையிலிருந்த அனைத்தும் மித்ரனின் முன் அணிவகுத்து நிற்க, அவன் பார்வை ஒவ்வொன்றாய் அலசிக் கொண்டிருந்தது.
"பெப்பர் ஸ்ப்ரே, சிசர்ஸ், பாக்கெட் நைப் .. வாட்டர் பாட்டில் கடைசியா ஒரு அழுக்கு கர்ச்சீப்.. " என்றான் அந்த கர்சீப்பை கையில்
எடுத்தவாறே,

'அது ஒன்னும் சாதாரனமான கர்ச்சீப் இல்லடா , குளோராபார்ம் தடவுன கர்ச்சீப், கரெக்டான டைம்ல உன் மூஞ்சில வச்சிருந்தா இந்நேரம் பிளாட் ஆயிருப்ப' நிசா தனக்குள்ளே மைன்ட் வாய்சில் பேசிக் கொண்டாள்.

" நீங்க கொண்டு வந்திருக்கதெல்லாம் பார்த்தா திருட்டுத்தனமா வந்த மாதிரி தெரியல, ஏதோ மேட்னி ஷோ சினிமாக்கு கிளம்புன மாதிரி இருக்கு" மித்ரனின குரல் நிசாவின் எண்ணத்தை கலைத்தது.

இருவரும் விழி பிதுங்கி சொல்ல பதிலின்றி தலை குனிந்தனர்.

அவர்கள் இருவரையும் பார்த்து நக்கல் சாயம் பூசிய புன்னகையை உதிர்த்து விட்டு , தன் இருக்கறையில் மறுபடியும் தோரணையாக அமர்ந்தான், அவன் கையில் துப்பாக்கி மீண்டும் வான் நோக்கி உயர்ந்தது, ஒரு சிகரெட்டை பற்ற வைத்து புகைத்தவாறே பேசத் தொடங்கினான்,

" ஓகே .. நான் ஸ்ட்ரெய்ட்டா மேட்டருக்கு வரேன், உங்க பேரையும் இப்ப கொல்லனும்னா எனக்கு ரெண்டு செகன்ட் போதும் அப்றம் வெளிய இருக்ற உங்க ப்ரண்டுக்கு ஒரு புல்லட் எல்லாம் முடிஞ்சுரும்" இன்னொரு முறை சிகரெட்டை உள் இழுத்து விட்டு தொடர்ந்தான்,

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Où les histoires vivent. Découvrez maintenant