ஆ...சாமி

1.2K 159 176
                                    

மித்ரன் சுதாரித்துக் கொண்டு எழ முயற்சித்த வேளை, அந்த உருவம் அவனை நெருங்கி இருந்தது. அவன் தன்னை தற்காத்துக் கொள்ள முயலும் முன் , மற்றொறு அடி அவன் கன்னத்தில் விழ, மீண்டும் விழுந்தான். அவன் உதட்டின் ஓரத்திலிருந்து இரத்தம் எட்டிப் பார்த்தது.
நிசாவும் , மேரியும் நடப்பது என்னவென்று புரியாமல் முழிக்க, அந்த உருவம் அவர்களை சற்றும் கண்டு கொள்ளாமல் தன் கவனத்தை எல்லாம் மித்ரன் மீதே வைத்திருந்தது.
"யார்ட்ட டா உன் வேலைய காட்டுற .. போலீஸ்னா உனக்கு எளக்காறமா போச்சா.." அவன் குரல் அந்த அறையை துளைத்தது.
அவன் சொன்ன அந்த போலீஸ் என்கிற வார்த்தை மட்டும் மேரி மற்றும் நிசா காதுகளில் தேனாய் வந்து விழுந்தது. தாங்கள் பிழைக்கும் வழி பிறந்து விட்டதென்ற நினைப்பு அவர்களை பரவசமடையச் செய்தது. உடலெங்கும் புது இரத்தம் பாய, கண்கள் ஒளிர்ந்தன.
" எங்கள காப்பாத்துங்க சார்ர்ர்ர்...." என அடித் தொண்டையில் இருந்து கத்தினர்.
அவர்களின் இந்த திடீர் ஓலத்தை கேட்டு, வந்திருந்தவன் திடுக்கிட்டு சுவரில் சரிந்தான். சட்டென தன் துப்பாக்கியை மேரி , நிசா மீது தன்னிச்சையாக காட்டினான்.
"சார் எங்கள சுட்றாதீங்க , நாங்க அப்பாவீங்க " என்றாள் நிசா.
'இதுக்கு அவனே பரவால்ல போல, சுட்டுருவேனு மிரட்டத் தான் செஞ்சான். இவன் சுட்டே போடுவான் போல' மேரி மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
"யாரு நீங்க.. இங்க எப்படி வந்தீங்க .." என்றான் அவன் பதட்டமாக,
"நீ போலீஸ் தானே,.. கண்டுபிடி.." என்றான் மித்ரன் தன் உதட்டிலிருந்த ரத்தத்தை துடைத்தபடி,
சட்டென மித்ரனை நோக்கி திரும்பியவன் ,

"யாரடா.. இவங்கள்லாம்" என்றான் அதட்டலாக

"அவலுக வாய்ல என்ன கொலுக் கட்டையா இருக்கு , அங்கேயே கேளுங்க . என்னட்ட தான் இனி கேள்வியா கேட்டு தள்ள போறியே . இதுக்காச்சும் அவளுக சொல்லட்டும்"

"உனக்கு இன்னும் நக்கல் குறையல" அவன் மாரிலேயே ஒரு உதை கொடுத்தான்.

"சார், நாங்களே சொல்றோம் " என தொடங்கி ஹீரோவிடம் கதை சொல்லும் டேரக்டரை போல விசுவல் எபெக்ட் , பேக்ரவுன்ட் மியூசிக்கோடு
சொல்லி முடித்தாள் மேரி.

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Tempat cerita menjadi hidup. Temukan sekarang