சுமோ

1K 137 145
                                    

ராஜா... ராஜாதி ராஜனிந்த ராஜா..!
கூஜா... தூக்காதே வேறு எங்கும் கூஜா..!

இளையராஜாவின் இன்னிசைக்கு நடனமாடுவது போல குலுங்கி குலுங்கி சென்று கொண்டிருந்தது அந்த பழைய சுமோ கார். காரினுள்ளே பாடலுக்கு கோரஸாக மூவரும் சேர்ந்து பாடிக் கொண்டே சென்றனர். இடையில் பாடல் வரிகள் மறந்த வேளையில் பேசத் தொடங்கினாள் மேரி,

"ச்சே.. இது மாதிரி ஒரு மாஸ் சாங்காச்சும் பொண்ணுங்களுக்கு இருக்கா"

"ஆமாக்கா நமக்குனு இருக்கறதெல்லாம் லவ் சாங் தான் அதுலயும் முக்கால்வாசி டூயட் தான்.." நிசா வழிமொழிந்தாள் வண்டி ஒட்டியபடியே.

"நமக்கு ரொமான்ஸ் மட்டும் தான் வரும்னு இவங்களே முடிவு பண்ணிட்டாங்க போல.."

"ஏன்டி பொழம்பறேல் .. எங்காத்துல தான் ஆர்மொன்யம் இருக்கோல்லியோ . நானே மியூசிக் போட்டு, பாடிறேன் .. பேசா.." பின் சீட்டில் இருந்து தன் தலையை முன்னாள் நீட்டியவாறே மாமி.

"மாமி மியூசிக் வேணா போடுங்க .. தயஙு செஞ்சு பாடிறாதீங்க .." நக்கலடித்தாள் நிசா.

"என்னடி .. நக்கலா..? என் பாட்ட கேட்டுத் தான் என் ஆத்துக்காரர் என்ன கட்டிண்டார் .. தெரியுமோ நோக்கு.."

"அப்போ அந்த வருசம் வீர தீர செயலுக்கான அர்ஜுனா அவார்டு உங்க ஆத்துக்காரருக்கு தான்னு சொல்லுங்க" நிசாவும் மேரியும் ஹை பை செய்து கொண்டனர்.

"இப்படியே பேசிட்டிருங்கோ .. ஒரு நாள் இல்ல ஒரு நாள் நான் பாடி.." சொல்லிக் கொண்டிருந்தவள் தற்செயலாக ரோட்டை பார்த்ததும் நிறுத்தினாள், " என்னடி நடுரோட்டில ஒருத்தி பேயாட்டம் நின்னுன்டிருக்கா.."

"லிப்ட் கேக்றா மாமி" காரை ஸ்லோ செய்தாள் நிசா.
அவள் வண்டியை நிறுத்தியதும் இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க அந்த பெண் இவர்களை பார்த்து புன்னகைத்தாள், எலுமிச்சை நிறத்தில் மெல்லிய தேகத்துடன் இருந்தவள் கூந்தலை மட்டும் கிராப்பாக கரைத்திருந்தாள்.

"என்னடி பொண்ணுனு பாத்தா பையனாட்டம் இருக்கு.." காயத்ரி சொல்லி முடிப்பதற்குள் புதியவள் காரை நெருங்கியருந்தாள்.

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Where stories live. Discover now