தோட்டா

1.1K 137 170
                                    

தன் நண்பனை அந்த கோலத்தில் பார்த்த மித்ரன் முகம் வெளிறி போனது. இவர்கள் நட்பு எளிதில் மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை, காக்கி கட்டைகளின் மோப்பத் திறனை கண்டு வியந்து தான் போனான். இதை இவன் எதிர்பார்த்திருந்தான், ஆனால் இவ்வளவு சீக்கிரம் நடக்குமென எதிர்பார்க்கவில்லை. நாட்டு நாய் தானே.., யார் கேட்க போகிறார்கள் என்று அந்த லூசுகளின் நாயை தூக்கியதற்கு நூறாவது முறையாக வருத்தப் பட்டான். அவனது அத்தனை பிளான்களும் மூன்று சாதாரண பெண்களால் சின்னா பின்னாமானது அவன் திட்டத்தில் எதிர்பாராத பிழை.

"உன் சாயம் எல்லாம் வெழுத்துப் போச்சு " நாராயணன் முதலில் வாய் திறந்தார்,
"எவ்வளவு நல்லவன் மாதிரி நடிச்சடா.. உன்ன நம்பி தானே உன்ட்ட இந்த வேலையை கொடுத்தேன். இப்படி பண்ணிட்டியே.."

"என்ன சார், போலீஸ் நீங்களே நல்லவங்களா இல்ல, பொறுக்கி நான் எப்படி சார் நல்லவனா இருக்க முடியும்"

"இந்த வாய் முன்னாடியே பேசிருந்தா உசாராயிருப்பேன். அமுக்கமா இருந்துட்டியே . உன்ன நம்பி பணத்த மாத்த குடுத்தா.. எங்கட்ட ஒரு பாஸ்வேர்டு குடுத்துட்டு, எங்களுக்கு தெரியாமலே பணத்த எடுக்க முடியாத மாதிரி இன்னொரு பாஸ்வேர்டு போட்டு வச்சியே என்னா மூளை டா உனக்கு... பேரம் பேசுறதுலயும் ஒரு நியாயம் வேணாம், 2% ல இருந்து நேரா இருபதுக்கு போற.. எனக்கும் சாமிக்கும் சேத்தே இருபது தான்டா.."

"இதெல்லாம் ஏன் நாராயணன் அவன்ட்ட சொல்றீங்க" என்றான் ரவி

"இல்ல சார் நான் கூடத் தான் உங்கட்ட எக்ஸ்ட்ரா 5 % கேட்டேன், நீங்க மூடிட்டு போனு சொன்னதும் மூடுனவன், இப்ப வரை தொறக்கலியே, எதுலயும் ஒரு நியாயம் வேணுமில்ல சார்..." மேலும் பேச தொடங்கியவனை ஜெர்ரி தன் பார்வையால் மௌனமாக்கினான்.

"லுக் மித்ரா, எனக்கு அந்த 500 அக்கவுன்ட் பாஸ்வேர்ட்ஸ் வேணும்"

"500 பாஸ்வேர்ட நியாபகம் வைக்க நான் என்ன கம்ப்யூட்டரா சார், ஒரு பாக்கெட் சிகரெட் கொடுங்க நான் யோசிச்சு ஒன்னு ஒன்னா சொல்றேன்."

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Where stories live. Discover now