மொபைல்

1.3K 154 140
                                    

        காயத்ரியின் இதயம் துடிக்கும் வேகத்திற்க்கு அவளது ஓட்டை மொபைல் ஈடு கொடுக்க முடியாமல் திணறியது. அவளது கோபம் , அலட்சியம் , சோகம் என ஒவ்வோரு பீலிங்கிற்கும் கீழே விழுந்து பல கீரல்களை விழுப்புண்ணாக வாங்கிய அந்த மொபைல் கொஞ்சம் பாவம் தான். காயத்ரியின் விடா முயற்சியால் ஒரு வழியாக நூறுக்கு டயல் செய்து விட்டாள்.
அந்த மிக நீண்ட, பத்து நொடி டயலர் டோனுக்குப் பின் மறுமுனையில் ஒரு பெண் குரல் கேட்டது.
"இது காவல் துரை அவசர உதவி மையம்.. சொல்லுங்க மேடம் உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?.. "

காயத்ரிக்கு ஓர் உதவியா வேண்டும் நடந்த அத்தனை நினைவுகளும் அவளை ஒரே நொடியில் தாக்க , பற்றாக்குறைக்கு பயமும் சேர்ந்து கொண்டு அவள் வார்த்தை தொகுப்பை குலைத்தது. வாயில் வந்ததை எல்லாம் பேச தொடங்கினாள்,
"டாமி கானோம்.. நிசா உள்ள போன்.. மேரி...
துப்பாக்கி.. வீட்ல காப்பாத்துங்க ப்ளீஸ்.."
நிலாவை பார்த்த தெய்வதிருமகள் விக்ரமை போல மாறி விட்டாள் காயத்ரி.

"மேடம் நீங்க சொல்றது எங்களுக்கு புரியலை .. உங்க வாய்ஸ் ரொம்ப ப்ரேக் ஆகுது.. தயவு செய்து தெளிவாக உங்க பிரச்சனைகளை கூறவும் அப்போது தான் எங்களால உதவ முடியும்.."

காயத்ரிக்கு நிலவரம் புரிந்து தன்னை திடப் படுத்திக் கொள்வதற்குள் மறுமுனை இரன்டு முறை மேடம் ... மேடம் என திக்கி திக்கி கூறி விட்டு கட் ஆனது, காயத்ரியின் மொபைல் இந்த காலை சரியான நேரத்தில், கட் செய்த மகிழ்ச்சியில் ஒருமுறை பளிச்சென தன் டிஸ்ப்ளே ஒளிர சிரித்துவிட்டு அணைந்து போனது. நடந்தவைக்கு எல்லாம் பழிவாங்க இப்போது அதன் தருணம் .

காயத்ரி கட்டி போட்ட யானையை போல அங்குமிங்கும் நடக்க தொடங்கானாள் ,
"டீப் பிரத்.. டீப் பிரத்.." என மனதிற்குள் முனங்கிக் கொண்டே இருந்தாள், நடந்த சம்பவங்களை எல்லாம் ஆரம்பத்திலிருந்து அசை போட்டதோடு விடாமல், செய்யுளை மனப்பாடம் செய்வது போல அனைத்தையும் மனதிற்குள் சொல்லியும் பார்த்துக் கொண்டாள், பெருமூச்செறிந்து விட்டு தயாரானாள் அடுத்த அழைப்புக்கு.

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Where stories live. Discover now