அன்று நேரமாகவே ஸ்டேஷன் வந்து விட்டான் நாராயணன். நெற்றியில் சந்தனமும் குங்குமமும் ஒட்டியிருக்க, வழியில் டீ கடையில் கேட்ட பாட்டை மனதுக்குள் முணுமுணுத்து வாறே நுழைந்தான்.
" என்னய்யா எல்லாம் இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி இருக்கீக .. எவன் எழவு கொட்டுனான் இன்னைக்கு.."
தன் இருக்கையில் அமர்ந்து ரெண்டு சட்டை பட்டனை கழட்டி விட்டான், ' நவம்பர்லயே இந்த வெயில் அடிக்குது.' அவனுக்கு மேல் பேன் மாரத்தான் ரன்னரை போல மெதுவாக ஓடிக் கொண்டிருந்தது.
" ஏட்டய்யா அந்த பல்லாவரம் கேஸ் பைல் கொண்டாய்யா .. இணைக்காச்சு முடிப்போம்."
தட் என்றது பைல், வழுகி தரையில் விழுகையில், அதை எடுக்க இவன் எத்தனிக்க , இவனோடு குனிந்த ஏட்டய்யா கிசுகிசுத்தான்,
" அய்யா , உங்கள அர்ரெஸ்ட் பண்ண போறாங்க.. இங்க எல்லார் போனையும் புடுங்கி வச்சுட்டாங்க, அப்டி எஸ்கேப் ஆயிருங்கய்யா.. உங்க தயவில தான் இன்னைக்கு என் பொண்ணு படிச்சுற்றுக்கு , அந்த.."
அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே எழுந்து விட்டான் நாராயணன், இதயத் துடிப்பு இரைச்சலாக மாறியது, சுற்றி பார்த்தான் , ஆங்கங்கே புது முகங்கள், நைசாக நழுவ நினைக்கையில் வாசலில் நூர் வருவதை கண்டு விட்டான்." சார் நகலாதீங்க உங்கள கைது பண்றோம் " எதிர் திசையில் வாட்ட சாட்டமாக ஒரு போலீஸ் இளைஞன் இவனை நெருங்கி இருந்தான். அவன் கை துப்பாக்கி உரையை தேடுவதை கண்டு சுதாரித்தவன், அவனை தள்ளி விட்டு பக்கத்திலிருந்த லாக்கப்பில் நுழைந்து தன்னை பூட்டிக் கொண்டான், அவன் வைத்திருந்த லாக்கப் சாவி சரியான நேரத்தில் உதவியது. அங்கே கால் மேல் கால் போட்டு படுத்திருந்த பிக் பாக்கெட் இவனை கண்டதும் திடுக்கிட்டு எழுந்தான், " ஐயா என்ன நீங்க இங்க வந்துட்டீங்க வெளிய புழுக்கமா இருக்கா.."
அவனுக்கு பதில் நூரிடம் இருந்து வந்தது,
" நாராயணன் , நீங்க தப்பிக்க முடியாது, மரியாதையா சரண்டர் ஆயிடுங்க.." நாராயணன் சட்டென அவள் பார்வையிலிருந்து விலகி ஒரு மூலையில் அமர்ந்தான். தன் போனை எடுத்து டயல் செய்தான்.
ட்ரிங் ட்ரிங் ...... ட்ரிங் ட்ரிங்......
"நாராயணன் இதெல்லாம் வேஸ்ட் யாரும் உங்களுக்கு உதவ முடியாது" நூர் அவனை குரலால் துரத்தினாள் , அவன் கவனமோ போனை தவிர எங்கும் திரும்ப வில்லை.
" ஹலோ நாராயணன் " ஜெரியின் குரல் மறுமுனையில் ஒலித்தது.
" சார் நாம மாட்டிட்டோம், நூர் என்ன அர்ரெஸ்ட் பண்ண ஸ்டேஷன்கே வந்துட்டா.. அஞ்சு பேருக்கு மேல இருப்பாங்கன்னு நினைக்குறேன் . என்ட்டயும் கன் இருக்கு .. நீங்க உடனே ஆள் அனுப்புங்க்.."
" நாராயணன் நாராயணன்.. ஸ்லோ டவுன், நீங்க சொல்றதுலாம் சினிமால தான் நடக்கும். எப்படி அவளுக்கு வாரண்ட் கிடைச்சதுனு தெரிலேயே இப்போ எங்க இருக்கீங்க .."
ESTÁS LEYENDO
டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)
Humorமூன்று குடும்ப பெண்மணிகளின் சீரியல்களுக்குள் தொலைந்த வாழ்க்கை, சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அசாத்திய, அட்வெஞ்சராக மாறுவதை நகைச்சுவை கலந்து தொடுத்துள்ளேன். உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.