வேடம்

857 125 144
                                    

காயத்ரி தன் கனவில், பல தீவிரவாதிகளை கேப்டன் விஜயகாந்த் போல பந்தாடிக் கொண்டிருக்கையில், சட்டென சடன் பிரேக் போட்டு அவள் கனவை கலைத்தான் ட்ரைவர் வாசு, பதறி விழித்தவள் கண்களை கசக்கியவாறே,
"என்னாடாப்பா இடம் வந்துடுத்தா.."

வாசு இளைஞன் தான், இருபது வயது தான் இருக்கும். காவலராக பணியில் சேர்ந்து ஒரு மாதம் தான் ஆகிறது. காக்கி சட்டையுடன் கூர்க்கா வந்தாலும் சல்யூட் அடித்து விடுவான் அவ்வளவு பயம். காயத்ரி வேறு காலை எட்டு மணியிலிருந்து சிபிஐ ஆக அவதாரமெடுத்திருக்கிறாள் பயப்படாமல் இருப்பானா.. பவ்யமாக
"வந்தாச்சு மேடம்" என்றான்.

காயத்ரி கை கால்களை நீட்டி வளைத்து கும்பகர்ணன் யோகாசனம் செய்வது போல சோம்பல் முறித்தவாறே இறங்க முற்பட, அதற்குள் கான்ஸ்டபிள் செந்திலும், ட்ரைவர் வாசுவும் இறங்கி விட்டிருந்தனர். கீழே இறங்கிய காயத்ரி அண்ணாந்து தன் கண் முன்பு இருந்த கட்டிடத்தை பார்த்தாள்,
"என்னது இது சிபிஐ ஆபிஸ் மொக்கையானா இருக்கு, ஆபிசரலாம் பார்த்தா நோயாளி மாதிரி இருக்காளே..? " என்றாள்.

"ஆமாம் மேடம் , கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல நோயாளிங்க தானே இருப்பாங்க.." என்றான் செந்தில் அந்த கட்டிடத்தை நோட்டமிட்டவாறே

"என்னது தர்மாஸ்பத்திரியா.." வாயை பிழந்தாள் காயத்ரி.

"உங்கட்ட சொல்லலய்யா.. மித்ரன் பாடிய இங்கதான் வச்சுருக்காங்க... நீங்க தான் அடையாளம் காட்டனும்.."
அந்த கட்டடத்தை மேலும் கீழும் பார்த்தாள் காயத்ரி. பரபரப்பாக இருந்தாலும் பழைய கட்டிடம் ஆங்காங்கே விழுந்த விரிசலும் படர்ந்த கறையும் சேர்ந்து அந்த கட்டிடமே காச நோயாளி போல தான் காட்சியளித்தது.

"உங்களுக்கு முழுசா சொல்லலனு நினைக்குறேன் , நேத்து நைட்டு இன்ஸ்பெக்டர் நாராயணன் வண்டில வந்து சில பேர் ஒரு பாடிய பள்ளிகரனை குப்பை கிடங்குள போட்டிருக்காங்க.. அந்த பாடி மித்ரன் தான்னு எங்களுக்கு தோணுது . அதான் அவன நீங்க தானே பாத்திருக்கீங்கனு உங்கள அடையாளம் காட்ட கூட்டிட்டு வந்தோம்.."

டிடெக்டிவ் திருமதீஸ் (Completed)Where stories live. Discover now